| ஒழிபியல் - நூற்பா எண். 40 | 337 |
வினையாலணையும் பெயரையும் பெயரெச்சத்தையும் எடுத்தும் அவ்வினைமுற்றையும் வினையெச்சத்தையும் படுத்தும் ஒலித்தல் வேண்டும் என்பர் இவ்வாசிரியர். இவ்வெடுத்தல் படுத்தல் ஓசைபற்றி இலக்கண ஆசிரியர்களிடையே பலவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ‘உண்டான், தின்றான் என்னும் தொடக்கத்துப் படுத்துச் சொல்லப்படும் தொழிற் பெயர்’. - தொ. சொ. 70 சே. ‘வந்தனன் எனத் தெரிநிலைவினை தொழின்மை மேற்படத் தொழிலுடைப்பொருள் கீழ்ப்பட முற்றாய் நின்று உணர்த்திய வாறுபோல, உடையான் எனக் குறிப்புவினையும் உடைமை மேற்பட உடையான் கீழ்ப்பட முற்றாய் நின்று உணர்த்துதலும் கொள்க. வந்தான், உடையான் எனப் பெயராயவழித் தொழிலுடைப் பொருளும் உடையானும் மேற்பட்டுத் தோன்றுமாறு அறிக’. - தொ. சொ. 215 சே. எவன் என்ற குறிப்பு வினைமுற்று படுத்தல் ஓசையால் பெயராகும்’. -தொ. எ. 122 நச். சொ. 221. நச். ‘உண்பாய் உரைப்பாய் தின்பாய் என்ற முன்னிலைவினைகளை எடுத்தல் ஓசையால் கூறும்வழி அவை ஏவற் பொருண்மை உணர்த்தும்.’ - தொ. சொ. 225 நச். ‘நட, வா முதலிய எடுத்தல் ஓசையால் முன்னிலை ஏவல் ஒருமை முற்றாய் நிற்கும்; படுத்தல் ஓசையால் அச்செய்கை மேல் பெயர்த்தன்மைப்பட முன்னிலையாயும் நிற்கும். நடத்துவித்தான் என வருங்கால், இடைநிலையாகிய எழுத்துக்களும் பெற்று முன்னர் எடுத்தல் ஓசையாய், இடைநின்ற ஈறாகிய இகரம் படுத்தல் ஓசைப்பட்டு இடைநிலையாய் நிற்கும்’. - சொ. 226. நச். ‘செய்யும் என்ற சொல் எடுத்தல் ஓசையால் கூறப்படின் முற்றாம்; படுத்தல் ஓசையால் கூறப்படின் பெயரெச்சமாம்.’ - தொ. சொ. 237 நச்.
|