ஆகலானும் வருவார் அவராகலானும், செய்வாரும் கிளவியும் உருபும் வருவாரும் வினைமுதற் பொருளுடையவாதல் உணரப்படும்.] 32 செயப்படுபொருட்கண் பலஉருபு வருதல் 45 | +எல்லா உருபொடும் செயப்படு பொருள்எழும்.
|
எ-டு: சோறு அடப்பட்டது - முதலாவது; சோற்றை அட்டான் - இரண்டாவது; அரிசியால் சோறாக்கினான் மூன்றாவது; அவட்குக் கொள்ளும் இவ்வணிகலம் - நான்காவது; பழியின் அஞ்சும் - ஐந்தாவது; நூலது குற்றங் கூறினான் - ஆறாவது; தூணின்கட் சார்ந்தான் - ஏழாவது; - என முறையே காண்க. [வி-ரை: சோறு அடப்பட்டது என்பது தெரிநிலைச் செயப்படுபொருளாம். அரிசியைச் சோறாக்கினான், அவளைக் கொள்ளும் இவ்வணிகலம், பழியை அஞ்சும், நூலைக்குற்றம் கூறினான், தூணைச் சார்ந்தான் என ஏனையவற்றிற்கு இரண்டன் உருபு புணர்த்து அவை செயப்படுபொருளாதல் கண்டு செயப்படுபொருள் எல்லா உருபொடும் வருமாறு உணரப்படும்.] 33 எ-டு: கருவிக்கண் பல உருபு வருதல் 46 | *ஒன்று மூன்றுநான்கு ஐந்துஆறு உருபொடு கருவி வரும்எனக் கருதினர் புலவர். |
கண்காணும் - முதல்; கண்ணாற் காண்பன் - மூன்றாவது;
+ நன்னூல்317. முனிவர் உரை. * நன்னூல்317. முனிவர் உரை. |