பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 14211

முத்தும் எழுதப்பட்டு - வினையெச்சம்.

இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் - வினைமுதல்.

ஊராரால் உண்ணப்படுவதாகிய நீர் - செயப்படுபொருள்.

எழுத்தாணி எழுதப்பட்டது - கருவி.

என அவ்வெட்டனுள் படுசொல் அணைந்து வந்தது காண்க.

[வி-ரை: முதல்நிலை முதலிய ஏழனோடு ‘ஆதி’ என்ற மிகை யாற்கொண்ட கருவியும் கூட்ட எட்டாமாறு காண்க.]

5முற்று தொழிற்பெயர் முதலினுள் படுசொல்
வரினும் படுபொருள் வருதல் இன்றாயும் இயலும்

‘உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்’                                    - கு. 921

என்புழி, உட்கார் எனவே பொருள்படுதலின் படு சொற்குப் படுபொருள் வாராமை காண்க.

‘பெயரெழுவாய் வேற்றுமையாம் பின்பதுதான் ஆறு
பயனிலையும் ஏற்கப் படுதல்’                                    -நே.சொ. 17

என்புழி ஏற்றல் என்றே பொருள்படுதலின் படுசொற்குப் படுபொருள் வாராமை காண்க.

‘முதல்’ என்றதனால்,

உண்ணப்பட்ட சாத்தன் - உண்ணப்பட்டு வந்த சாத்தன் என்பன ஒரோவழி உண்ட சாத்தன் - உண்டு வந்த சாத்தன் எனவே பொருள்படுதலின் ஈரெச்சத்தினுள்ளும் கொள்க. கற்பிக்கப்படும் ஆசான், கற்பிக்கப்படா ஆசான், கற்கப்படு மாணாக்கன், கற்கப்படா மாணாக்கன் என்பனவும் அது.

[வி-ரை:

கற்பிக்கப்படும் ஆசான் - கற்பிக்கும் ஆசான்;

கற்பிக்கப்படா ஆசான் - கற்பிக்கா ஆசான்;