பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 31315

இம்முறையே வினையியலுள் முற்று ஒன்றற்கு மாத்திரமே எடுத்துக் கூறுதலானும்,

ஆண்டும் அன்விகுதியை ஈரிடத்தும் கூறுதலானும்,

இம்முற்று விகுதிகளில் சில பிறவற்றினும் செல்லினும் செல்லுக என்னும் கருத்தால் எதிரது தழீஇய எச்ச உம்மையோடு ‘பெயரினும் சிலவே’ (ந. 140) என்றமையானும்,

பொதுவிதியாயின் ‘பெயரினும் சிலவே’ என்னார் ஆதலானும்,

பகுதி இடைநிலைகளுள் முற்று ஒன்றற்கே சிறப்பித்துக் கூறி ஏனைப் பகுதி இடைநிலைகளை ஒழித்தமையானும்,

இவ்விகுதிச் சூத்திரத்திற்கு முன்பின் நின்ற சூத்திரக் கருத்துக்களானும்,

பெயரியலுள்ளும் வினையியலுள்ளும் வேண்டும் விகுதிகளை அவற்றிற்கு வேறாக எடுத்து ஓதலானும், யாம் காட்டிய நால்வகை விகுதிகளை ஒழித்தமையானும் இன்னும் பலவற்றானும் என்க.

பிறவாவன ஈரெச்சங்களும், பெயர்ப் பகுபதங்களும், மற்றது மற்றையான் முதலிய இடைப் பகுபதங்களும், மழவன் முதலிய உரிப் பகுபதங்களும் என்க.

இக்கருத்து அறியாதார் அச்சூத்திரம் பொது என்றும், வினைக்கும் பெயர்க்குமே பொது என்றும், அன்விகுதி கூறியது கூறல் என்னும் குற்றம் என்றும், ஒன்று அல்விகுதி மற்றொன்றில் அன்விகுதி என்றும் சூத்திரம் பிழைபட்டதாகக் கருதித் திருத்தித் திருத்தினம் என்றும், இன்னும் பல கருதி மயங்குவர் என்க.

[வி-ரை: பெயரில் கொண்ட விகுதிகள்:

‘கிளை எண் கு ழூ உ முதல்’                                       - ந. 276

‘கிளை முதலாகக் கிளந்த’                                          - ந. 277

‘கிளந்த கிளை முதல்’                                             - ந. 278

‘வினாச்சுட் டுடனும்'                                              - ந. 279

‘முன்ன ரவ்வொடு வரு’                                           - ந. 280

என்பன.