பக்கம் எண் :

66இலக்கணக் கொத்து 

இந்நூலின் தோற்றம்பற்றிய விளக்கமும் அவையடக்கமும்

6பத்தொடு ஒன்பது பாடை நூல்களுள்
மாறு படுதல் வழக்கே,1 அன்றியும்
ஒவ்வொரு பாடையின் உள்ளே ஓரின்
பலநூல் மாறு படுமே2 அன்றியும்
ஒவ்வொரு நூற்கடல் உள்ளே ஓரின்
எழுத்துச் சொல்பொருள் யாப்புஅணி ஐந்தனுள்
ஒன்றனை ஒன்றே ஒழிக்கும்,3 அன்றியும்
ஓர்அதி காரத்து உள்ளே ஓரின்
ஓர்இயல் விதியினை ஓர்இயல் ஒழிக்கும்4
ஓர்இயல் அதனின் உள்ளே ஓரின்
ஒருசூத் திரவிதி ஒருசூத் திரவிதி
தன்னைத் தடுத்துத் தள்ளும்,5 அன்றியும்
ஒருசூத் திரத்தின் உள்ளே ஓரின்
ஒருவிதி அதனை ஒருவிதி ஒழிக்கும்,6
நூல்ஆ சிரியர் கருத்தினை நோக்காது
ஒருசூத் திரத்திற்கு ஒவ்வொர்ஆ சிரியர்
ஒவ்வொரு மதமாய் உரைஉரைக் குவரே,7
அவ்வுரை யதனுள் அடுத்தவா சகங்கட்கு
அவர்கருத்து அறியாது அவர்அவர் கருத்தினுள்
கொண்ட பொருள்படப் பொருள்கூ றுவரே,8
ஒருவிதி தனக்கே பலபெயர் வருமே,9
ஒருபெயர் தனக்கே பலவிதி வருமே,10
நூல்உரை போதகா சிரியர் மூவரும்
முக்குண வசத்தான் முறைமறந்து அறைவரே,11
இம்முறை எல்லாம் எவர்பகுத்து அறியினும்
அவத்தை வசத்தால் அலைகுவர் திடனே,12
அதிமதி நுட்பமோடு அதிகலை கற்பினும்
விதியது வசத்தால் விதிவிலக்கு அயர்ப்பாம்,13
ஆகையால் அளவிடல் அரிதே, அன்றியும்
சொல்லின் கூட்டமும் பொருளின் கூட்டமும்