| ஒழிபியல் - நூற்பா எண். 15 | 275 |
இனி, இவ்வறுவகையுமன்றி, அபகீர்த்தி அதிக்கிரமம், அபவாதம், துந்நிமித்தம் முதலிய பலவுள; அவையெல்லாம், விரிக்கின் பெருகுதலானும், தமிழிற்குப் பயன்படுதல் சிறுபான்மையாதலானும், விரித்திலமென்க. [வி-ரை: இன்மை, பிறிது, மறை என்ற மூன்றனுள் அபாவம் எனப்படும் இன்மையானது என்றும் அபாவம். இன்மையது அபாவம், ஒன்றின் ஒன்று அபாவம், உள்ளதன் அபாவம், அழிவுபாட்டு அபாவம் என்று தண்டியலங்காரத்துள் ஐவகையாக விளக்கப்பட்டுள்ளது. பிறிது என்பது அன்மை. நகரமே அகரமாகவும் அந் எனவும் திரியும் என்பது வீரசோழியும், நேமிநாதம் முதலிய நூற்கருத்தாகும். ‘நேர்ந்த மொழிப்பொருளை நீக்கவரும் நகரம் சார்ந்த துடலாயின் தன்னுடல்போம் - சார்ந்ததுதான் ஆவியேல் தன்னாவி முன்னாகும்’ - நே. எ 11 என்பதனால், நகரம் நிலைமொழியாக வருமொழியில் மெய் முதலெழுத்தாகவரின் நகர உயிர்மெய்கெட்டு அகரமே எஞ்சி நிற்க, ந + நியாயம் - அநியாயம் என்றும், முதலெழுத்து உயிராயின் நகரத்தின் உயிர்முதலாக அந் என்று ஆகி அந் + அகன் - அநகன் என்றும் நிற்கும் என்பது. இதுவே வீரசோழியக் கருத்தும் ஆகும். ‘‘இனி இன்மை பற்றியும் வேற்றுமைத்தொகை நிகழும் என்பர் வடநூலார். அதனை நஞ்ஞு தற்புருடன் என்பர். ‘நேர்ந்த மொழிப்பொருளை நீக்கவரும் நகரம் சார்ந்த துடலாயின் தன்னுடல்போம் - சார்ந்ததுதான் ஆவியேல் தன்ஆவி முன்னாகும்’ - நே. எ. 11 என்பதனால், அகளங்கன் - அகங்கன் என்றும், அப்பிராமணன் - அநச்சுவம் என்றும், அதன்பமம் என்று, முறையே இன்மை, அன்மை, எதிர்மறை மூன்றினுள் நஞ்ஞு வரும். |