பக்கம் எண் :

182இலக்கணக் கொத்து 

இவ்வுரையது பெருமைக்கு ஒப்பில்லை                                        - உரை.

இச்சொற்கண் இருக்கும் இப்பொருள்                                         - சொல்.

களி ! வாராய்                                                             - களி.

மடி ! போவாய்                                                            - மடி.

இவ்வாறு முதல்நிலைத் தனிவினை எட்டு உருபு ஏற்றே எண் பொருளானது காண்க.

7முதல்நிலைத் தனிவினை,
செயப்படு பொருள்குன் றாமையும் குன்றலும்
பொதுவும் இடங்குன் றாமையும் ஆதல

விடு, ஏ, வை, வௌ, உண், தின், பார், கேள்

இவற்றுள் முதல்நிலைத் தனிவினை செயப்படுபொருள் குன்றாமை காண்க.

நட, வா, போ, வாழ் - இவற்றை முதல்நிலைத் தனிவினை செயப்படுபொருள் குன்றுதல் காண்க.

முடி, மடி, கெடு, தேய், தபு, பிரி-இவற்றுள் பொதுக்காண்க.

[வி-ரை: நீ முடி, நீ மடி, நீ கெடு, நீ தேய், நீ தபு, நீ பிரி எனச் செயப்படுபொருள் குன்றி வருதலும், துணியை முடி, துணியை மடி, பொருளைக் கெடு, பொன்னைத் தேய், அவனைத் தபு, நண்பனைப் பிரி எனச் செயப்படுபொருள் குன்றாமையும் இம்முதல் - நிலை ஒவ்வொன்றும் பெறுதலின், இவை செயப்படுபொருள் குன்றுதலும் குன்றாமையுமாகிய பொதுநிலை உடையன.]

உரிஞ், செல் - இவற்றுள் இடம் குன்றாமை காண்க.

[வி-ரை: இவை ஒருமை ஏவல் வினையதலின் முன்னிலை யாயின.]

8அ.முதல்நிலைத் தனிவினை பலபொருட்கு ஒன்றாதல்

ஒருவனை வைதான்
சுமையை வைத்தான்

வை