பக்கம் எண் :

184

இலக்கணக் கொத்து 

திருச்சிராப்பள்ளிக்கும் திருநெல்வேலிக்கும் மதுரை நடு.

[நடு-இடை]

கொற்றா நட [நட-ஏவல்வினை]

கன்று நட வந்தான் - [நட-வினையெச்சம்]

என முதல்நிலைகள் ஏவல் முற்றாதலேயன்றி, நடுவன் என்னும் பெயராயும், இடை என்னும் பெயராயும், செய என் எச்சமாயும் வந்தன காண்க.

இச்சூத்திரம் பிறர்மதம் கூறலே; தன் துணிபு உரைத்தலன்று; பிறர் தம்முள் மறுப்பர். அவை விரிக்கின் பெருகும் ஆயினும், ஒருவர் மதத்தை மாத்திரம் சிறிது கூறுகின்றாம்.

முதல்நிலைகள் முன்னிலை ஏவல் ஒருமை எதிர்கால வினைமுற்று என்பையாயின், அது பொருந்தாது; என்னை? இவை ஆறும் மாறுதலின். அஃது எங்ஙனம் எனின், முதல்நிலை தனியே நின்று முன்னிலைக்கண் சென்றதாயின், அவ்வாறு ஏனை ஈரிடத்தினும் சேறல் வேண்டும்; செல்லாதாகலின் முன்னிலையன்று.

ஏவலாயின், முதல்நிலைக்கண் வி-பி இணைந்து வேறு பொருள் பட்டாற்போல, ஐ ஆய் இகரவிகுதி கூடின் வேறு பொருள் படவேண்டும்; அஃது இன்று. முதல்நிலை தானே ஏவலாய் இருக்கவே, அதன்மேல் மூன்று விகுதியும் விதித்தல் நின்று பயன் இன்மையாம். ஆகையால் ஏவல் அன்று.

நடந்தார் என்புழி நட என்னும் வினை பன்மைப்பாற் பொருள் படலின் ஒருமையன்று.

நடந்தான் என்புழி நட என்னும் சொல் இறந்த கால வினை ஆதலின் எதிர்காலம் அன்று.

நடத்தல் என்புழி நட என்னும் சொல் பெயராகியே நிற்றலின் வினை அன்று.