| வினையியல் - நூற்பா எண். 3 | 187 |
1 | தொடர்வினை, முதல்நிலைத் தனிவினைப் பகுதி முன்னர் விகுதிமுதல் ஐந்தனுள் வேண்டுவ பொருந்தியும் ஆகும்
|
எ-டு: ஆடுதல், ஆடல், சொல்லு, அருளு, வாரு, செய்து, செய்பு - இவைபோல்வன எல்லாம் (தல்-அல் உ-து-பு முதலிய) விகுதி பொருந்தின. உண்டான் - தின்றான் போல்வன விகுதியும் இடை நிலையும் பொருந்தின. உண்டனன் - உண்கின்றனன் போல்வன விகுதியும் இடை நிலையும் சாரியையும் பொருந்தின. நடக்கின்றனன் - விடுக்கின்றனன் போல்வன விகுதியும் இடைநிலையும் சாரியையும் சந்தியும் பொருந்தின. நடந்தனன் - முடிந்தனன் போல்வன ஐந்தும் பொருந்தின. ‘வேண்டும்’ என்றதனால், நடந்து (நட + ந் + த் + உ) போனான் (போ + (இ)ன் + ஆன்) என முறையின்றியும் பொருந்தும். [வி-ரை: ஆடுதல் - ஆடு + தல்; ஆடல் - ஆடு + அல்; அருளு - அருள் + உ; வாரு - வார் + உ; செய்து - செய் + து; செய்பு - செய் + பு; உண்டான் - உண் + ட் + ஆன்; தின்றான் - தின் + ற் + ஆன்; உண்டனன் - உண் + ட் + அன் + அன்; உண்கின்றனன் - உண் + கின்று + அன் + அன்; நடக்கின்றனன் - நட + க் + கின்று + அன் + அன்; |