விடுக்கின்றனன் - விடு + க் + கின்று + அன் + அன்; நடந்தனன் - நட + த்(ந்) + த் + அன் + அன்; முடிந்தனன் - முடி + த்(ந்) + த் + அன் + அன்; 2 | தொடர்வினை, அவையினுள் ஒன்று அணையாதே திரிந்தும் வரும்.
|
கேடு, பாடு, வீடு போல்வன அவ்வைந்தனுள் ஒன்றும் அணையாதே திரிந்து வினையாயின. [வி-ரை: ஐந்து - விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன. கெடு, படு, விடு என்பன கேடு, பாடு, வீடு எனத் திரிந்தன. இவை முதல்நிலை திரிந்த தொழிற் பெயர்களாம். 3 | தொடர்வினை, திணையே பால்இடம் பொழுதுஇவை தீண்டித் தொழிற்பெயர் முற்றுஈ ரெச்சமாய்த் தோன்றிச் சிறப்புப் பொதுஎனச் சேறலும் அன்றியும்
|
அவ்வளவும் வெளி. [வி-ரை: திணை, பால், இடம், காலம் இவற்றைக் காட்டித் தொழிற்பெயர், முற்று, பெயரெச்சம், வினையெச்சம் என்பனவாகத் தோன்றிச் சிறப்பு வினையாகவும் பொது வினையாகவும் தொடர்வினை அமையும் என்பது. திணை, பால், இடம், காலம் காட்டும் ‘வந்தான்’ போன்ற முற்றுக்கள் சிறப்புவினை. இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாக அமையும் ‘நடத்தல் முதலிய தொழிற்பெயர், ‘நடந்து’ முதலிய வினையெச்சம், ‘நடந்த’ முதலிய பெயரெச்சம் போல்வன பொதுவினை எனக் கொள்க.] 4 | தொடர்வினை, தன்வினை பிறவினை அவ்விரு வினைப்பொது ஆகும்.
|
பிரிவர், ஆடுவர் - தன்வினை. பிரிப்பர், ஆட்டுவர் - பிறவினை. |