| ஒழிபியல் - நூற்பா எண். 31 | 313 |
‘கண்டனையது’ (கோவை. 84) ‘விழுங்கியற்று’ (கு. 931) ‘கண்டற்றால்’ (கு.249) எனவும். மயிலன்னாள் - புலிபோல்வான் எனவும், சைவன் - பார்வதி - கார்த்திகேயன் - காங்கேயன் - வைநதேயன் எனவும் முதற்கண் உவமஉருபு, விகுதி வருவனவும் கொள்க. [வி-ரை: உவம உருபு - அனைய, அற்று, அன்ன, போல் என்பன. சிவனை வழிபடுவான் சைவன்; கார்த்திகையன் மகன், கங்கையின் மகன், விந்தையின் மகன் என்பன முறையே கார்த்திகேயன், காங்கேயன், வைநதேயன் என வரும். பர்வதராசன் மகள் பார்வதி என்பது. இவையும் பிரயோக விவேக தத்தித படலத்துள் காணப்படும். - பி. வி. 32 உரை.] இனி, ‘அன் ஆன்’ (140) என்னும் சூத்திரத்தால் நன்னூலார் விகுதிகளை அளவு செய்திருக்கவே, அளவிலையாகி வரும் விகுதி என்றது என் எனின், தெலுங்கு - வடுகு - அருளு-வாரு சொல்லு எனவும், அகத்தியம் - தொல்காப்பியம் - அவி நயம் - மகன் - மகள் - மகார் - பிறன் - பிறள் - பிறர் - அவ் இவ் - உவ் - எவ் - கோன் எனவும். ஆண்மை - பெண்மை - உடுக்கை - படுக்கை - காப்பு - புணர்ப்பு - புணர்ச்சி - மகிழ்ச்சி - குழவி - மகவு எனவும், வடமன் -தென்மன் - எழுதல் - ஆடுதல் - சாக்காடு - வேக்காடு உணப்பாடு தினப்பாடு - ஆக்கம் - ஆட்டம் பாய்த்துள் - செய்யுள் - வாரானை எனவும், உயிர் - மெய் - உயிர்மெய் - சொல் ஆகிய நான்கு விதிகளும் அளவின்றி மிகவும் பரந்து வருதல் நோக்கி, சிறுபான்மை பயன்படும் பொது விகுதிகளை எல்லாம் ஒழித்துப் பெரும்பான்மை பயன்படும் வினைமுற்று ஒன்றற்கே வேண்டும் சிறப்பு விகுதிகளை மாத்திரமே அளவு செய்தார் என்று கொள்வதல்லது, எல்லாவிகுதிகளையும் அளவு செய்தார் என்று கொள்ளற்க. [வி-ரை: உயிர் விகுதி - உ; மெய்விகுதி - ம், ர், ள், வ், ன்; உயிர்மெய் விகுதி - மை, கை, பு, சி, வி, உ; இடைச்சொல் ஆகும் விகுதி - மன், தல், ஆடு, பாடு, அம், உள் ஆனை; இவர் கூறும் மெய்விகுதிகளில் கருத்து வேறுபாடு உண்டு.] |