பொதுவாக ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்ற நன்னூலார், அகர ஈற்றுப் பல சில என்னும் சொற்களும், அவ்வழிப் புணர்ச்சிக்கண் இருபெயரொட்டாக வரும் இகர ஐகார ஈற்றுச் சொற்களு, மீ என்னும் ஈகார ஈற்றுச் சொல்லும், குற்றியலுகர ஈற்றுள் இடை ஒற்று இரட்டிய நெடில் உயிர்த் தொடர்களும் கொடி என்ற வருமொழியோடு புணரும் பனை என்னும் ஐகாரஈற்றுச் சொல்லும் மிகும் என்று பின்னரும் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். படர்க்கை ஆண்பால் வினை விகுதியாக அன் என்பதனைக் கூறியபின், தன்மை ஒருமை விகுதியாகிய அன் என்பதும் உண்டு என்பது ஒரே நூற்பாவில் சுட்டப்பட்டது. அதுவே, விளக்கமாக அன்-ஆண்பாற் படர்க்கை விகுதி என்று ஒரு நூற்பாவில் கூறப்பட்டபின், அடுத்து ஆறாவது நூற்பாவில் அன் என்ற தன்மை ஒருமை விகுதியும் கூறப்பட்டது. நேர் நிரை என்ற அசைகளுக்குப் பொது எடுத்துக்காட்டாக வேல் நிறம் என்பன கூறப்பட்டபின், வெண்பாவின் ஈற்றசைச் சீராக வரும் நேர், நிரை என்பனவற்றிற்கு நாள், மலர் என்ற சிறப்பு வாய்பாடும் கூறப்பட்டுள்ளன. (அமிதசாகரர் - யாப்பருங்கலக்காரிகை) நேர் நேர் நிரை - நிரை நேர் நிரை - எனவும், மாவாழ்சுரம் - புலிவாழ்சுரம் - எனவும் கூறிய நத்தத்தனார். தூஉமணி - கெழூஉ - மணி என்ற வாய்பாடுகளையும் கூறியுள்ளார். ‘மாவாழ் புலிவாழ் சுரமுளவாக மணியிறுவாய் ஓவா தளபெடுத் தூஉங் கெழுஉவு முதாரணமாய் நாவார் பெரும்புகழ் நத்தத்தர் யாப்பி னடந்துபோல் தேய்வா முகரம்வந் தாலியற் சீருக்குச் செப்பியதே’ என்ற யாப்பருங்கலக்காரிகை மேற்கோள் (26) நூற்பாவை நோக்குக. ‘அம்ஆம்’ (தொ. சொ. 204) என்னும் சூத்திரம் முதலாகப் ‘பல்லோர் படர்க்கை’ (தொ. சொ. 229) என்னும் சூத்திரம் இறுதியாக மூவகை இடமும் மூவகைப் பொருளும் இருவகை வினையும் எடுத்து ஓதியவற்றை, ஈண்டும், |