| பாயிரவியல் - நூற்பா எண். 7 | 99 |
நேர் நேர் நிரை நேர்’ - ய. கா. 6 என்றவர் தாமே, ‘தேமா புளிமா’ - யா. கா. 7 என்றும். ‘காசு பிறப்பு’ - ய. கா. 28 என்றும் கூறினார். ‘நேர் நேர் நிரை’ ‘நிரை நேர் நிரை’ என்றவர் தாமே (நத்தத்தர்) ‘மாவாழ்சுரம், புலிவாழ்சுரம்’ என்றும், தூஉமணி கெழுஉமணி’ என்றும் கூறினார். தொல்காப்பியமும் அது. அது கண்டு நச்சினார்க்கினியரும் அநுவாதம் என்று எழுதினார். ‘சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்(கு) ஆக்கம் எவனோ உயிர்க்கு. - கு. 31 என்றவர் தாமே, ‘அறத்தின்ஊஉங்(கு) ஆக்கமும் இல்லை’ - கு. 32 என்று பின்னும் கூறினார். இவை அறியாக்கால் பொருள் உரைக்கவும் கேட்கவும் கூடாது என்பது தோன்றத் தேற்றம் இரட்டித்தாம். முன்னது அது நிமித்தம், பின்னது இது நிமித்தம் என்று அறிதல் அருமை நோக்கி ‘அடக்குக’ என்றாம். [வி-ரை: அண்மைநிலை கருதியும், தெளிவு கருதியும் இலக்கண நூல்களில் முன்னர்க் கூறப்பட்ட செய்திகள் பின்னருங் கூறப்பட்டிருத்தல் கூறியதுகூறல் என்னும் குற்றமாகாது, வழிமொழிதல் என்னும் நூற்புணர்ப்பாம் என்பது விளக்கப்பட்டு உள்ளது. |