அநுவாதம் என்றே கொள்க. கூறியது கூறல் வெளி. ஏனையது எங்ஙனமெனின், யாதானும் ஒரு நிமித்தத்தால் ஒன்றனை முற்கூறி வேறொரு நிமித்தத்தால் அதனையே பின்னும் கூறல் என்க. ‘நின்ற உயிர்முன் கசதப மிகும்’ - ந. 165 என்று கூறினவர் தாமே, ‘பலசில எனும்இவை தம்முன் தாம்வரின் - மிகும்’ - ந. 170 ‘அல்வழி இஐ முன்னராயின் - மிகும்’ - ந. 176 ‘மீக்கு வலி மிகும்’ - ந. 178 ‘நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள் டற-வொற்று இரட்டும் வேற்றுமை மிகவே’ - ந. 183 ‘பனைமுன் கொடிவரின் மிகும்’ - ந. 203 என்று பின்னும் கூறினார். ‘அன்ஆன் அள்ஆள்’ - ந. 140 என்றவர்தாமே’ ‘என்ஏன் அல்அன்’ - ந. 140 என்றார். அன்ஆன் இறுமொழி’ - ந. 325 என்றவர் தாமே, ‘அல் அன் என் ஏன் ஆகும் ஈற்ற’ - ந. 331 என்றார். ‘நேர் நிரை’ - ய. கா. 5 என்றவர் தாமே, ‘வேல் நிறம்’ - யா. கா. 5 என்றும், ‘நாள், மலர்’ - யா. கா. 7 என்றும் கூறினார். |