| பாயிரவியல் - நூற்பா எண். 7 | 97 |
பலரானும் அறியப்படுதலானும் அவற்றையே மீண்டும் எடுத்து மொழிவது பயனிலகூறுதலாகும்; ஆகவே, பல இலக்கண நூல்களுள்ளும் ஆண்டாண்டு அருகிக் காணப்படும் விதிகளுள் மிகப் பயன்படுவனவற்றுள் சிலவற்றை ஆசிரியர் எடுத்தோதியுள்ளார். உள்ளனவற்றைத் தொகுத்துக் கூறியுள்ளாரேயன்றிப் புதியதாய் எதனையும் படைத்து மொழியவில்லை.] 6 | முன்னொடு பின்மலைவு உள்ளன போல வருவன எல்லாம் பிறர்மதம் ஆக்குக |
முன்னொடு பின் மலைவாவது யாதானும் ஒன்றனையே இது விதி என்றும், விலக்கு என்றும், இயல்பு என்றும், திரிபு என்றும், இது பெயர் என்றும் அது பெயர் என்றும், இன்னும் மாறுபடக் கூறுதல் என்க. இம்மலைவு இந்நூலில் பெரும்பாலும் வரும். அவை எல்லாம் அவரவர் கொண்ட மதம் என்க. அவரவர் பெயர்களை அங்ஙனம் அங்ஙனம் உரைக்கின் பெருகுதல் பற்றிக் கூறாம். அவை எல்லாம் மலைவு அல்ல என்பது தோன்றப் ‘போல’ என்றாம். அங்ஙனம் மலைவனவற்றை எடுத்தோதல் என் எனின், அவையெல்லாம் ஒவ்வொரு நியாயத்தால் பயன்படுதல் நோக்கி என்க. [வி-ரை: இந்நூலுள் எந்த ஆசிரியர் கருத்தும் எடுத்து மறுக்கப்படவில்லை. பெரும்பான்மையும் ஆசிரியர் பலருடைய கருத்துக்களே தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. ஒரோவழியே ஆசிரியர் சிலருடைய பெயர்கள் கூறப்படினும், பெரும்பாலும் பலருடைய கருத்துக்களே கூறப்படுமேயன்றி, அப் பலருடைய பெயர்கள் கூறப்படவில்லை. இலக்கணக் கொத்து என்ற பெயருக்கு ஏற்ப, இந்நூலுள் ஒவ்வொன்று பற்றியும் இலக்கண ஆசிரியருடைய பல கருத்துக்கள் தொகுத்துக் கூறப்பட்டிருத்தலே இதன் சிறப்பு.] 7 | கூறிய பின்னும் கூறின சிலஅவை அநுவாதம் என்றே அறிந்தே அடக்குக |
இந்நூலுள் முற்கூறிய அதனையே பின்கூறுதலும் சில உள. அங்ஙனம் கூறுவது கூறியது கூறல் என்னும் குற்றமன்று; |