| வேற்றுமையில் - நூற்பா எண். 19 | 149 |
நஞ்சினைக்கலந்த பாலைக் குடித்தான். கத்தரிக்காயையும் புழுவையும் கறித்தான். பதரையும் நெல்லையும் பணத்திற்குக் கொண்டான். - இவை கருத்துடமை, கருத்தின்மை என்ற இருமையும் ஆயின. ஆரியனை ஐயுற்ற பொருளை வினாவினான். பசுவினைப் பாலினைக் கறந்தான். யானையைக் கோட்டைக் குறைத்தான். - இவை ஈருருபு இணைந்தன. பசுவினது பாலினை - யானையது கோட்டை - என்பனபோல, ஆரியனது ஐயுற்ற பொருளை என வாராமையின், ஈருருபு இணைதலில் இருவகை உண்மை தோன்ற இருவகைப்பட்டு ஈருருபு இணைதல் என்றாம். தன்னைப் புகழ்ந்தான். தன்னைக் குத்தினான். தன்னைப் பேணினான். தன்னைக் காதலித்தான் - கருத்தாவாதல். வருதலைச் செய்தான் - அகநிலைச் செயப்படுபொருள். மாடம் செய்யப்பட்டது - தெரிநிலைச் செயப்படுபொருள். தெரிநிலையாவது வினைமுதல் உருபு ஏற்றும் செயப்படு பொருளே எனத் தெரியநிற்றல். இது தெரிநிலை எனவே ஏனைய தெரியாநிலை என்க. தெரிநிலை, தெரியாநிலை - வடமொழி வழக்கு. எயிலை இழைத்தான் - இயற்றப்படுதல். பொருளைப்பெற்றான் - எய்தப்படுதல். கயிற்றை அறுத்தான் - வேறுபடுக்கப்படுதல் - முதலியன அவற்றுள் அடங்கும். |