பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 24157

வறியார்க்கு ஈந்தான் - வறியார் இரந்தே பெறுதலின் கேட்டே ஏற்றலாயிற்று. ‘வறியார்க்கு ஒன்று ஈதலே ஈகை’ (கு. 221) இரப்பார்க்கு ஒன்று ஈதல் - என்றே பிரயோக விவேகமும் எடுத்துக்காட்டுத் தந்துள்ளது (13). ‘அந்தணர்க்குப் பொன் கொடுத்தான் அரசன் என்புழி, அந்தணர் வேண்டும் என்று இரண்டு பெறுதலின் இரப்புக்கோளி ஆயிற்று. இரவலர்க்குப் பிச்சையிட்டான் என்பதும் அது’ - வீரசோழியம் 40 உரை.

மாணாக்கனுக்கு அறிவைக் கொடுத்தான் என்புழி, ஏனைய கொடை கொடுப்பானைவிட்டுக் கொள்வான் கண்ணேயே செல்வது போல, அறிவு ஆசிரியனை விடுத்து மாணாக்கன்கண்ணேயே சென்றுவிடாமையின், இஃது ஏனைய ஏற்றல் போலாது ஏலாது ஏற்றல் எனப்பட்டது. இச்செய்தியைச் சேனாவரையர் முதலாயினாரும் ‘நான்காகுவதே’ என்னும் நூற்பா (75) உரையுள் குறிப்பிட்டுள்ளனர்.

தனக்குச் சோறிட்டான் முதலியன கொடுப்பானும் கொள்வானும் ஒருவனேயாதலின் ஈவோன் ஏற்றல் என்றார்.

‘அருமறை... ... ... தனக்கு’ என்பது அபேதத்தில் வந்த நான்காவது’ என்று பிரயோகவிவேகமும் (13) குறிப்பிடும்.

ஆசிரியர் சிவனடி பரவும் செம்மையர் ஆதலின், அவர் கருத்தான் உயர்ந்தோன் ஏற்றல், இழிந்தோன் ஏற்றல் என்பன கொள்ளப்படும்.

சோழற்கு விருந்து கொடுத்தான் சேரன் - கொடுப்பானும் கொள்வானும் ஒத்த தகுதியினர் என்பது.

நீர்க்கு வாசம் ஊட்டினான் முதலியவற்றில் ஏற்கும் பொருள் இது வேண்டும் என்று கேட்கும் உணர்வு அற்ற அஃறிணைப் பொருளாய் இருத்தலானும், கொடைப் பொருளைத் தான் ஏற்றுச் சிறப்புறுதலானும் உணர்வின்றி ஏற்றல் எனப்பட்டது.