பக்கம் எண் :

158இலக்கணக் கொத்து 

மாணாக்கனுக்குக் கசையடி கொடுத்தான் ஆரியன் - இவ்வாசிரியர் காலத்தில் மாணாக்கர்மாட்டுத் தவறு காணின் அவரை ஒறுத்தும் நல்வழிப்படுத்தலை ஆசிரியர் விரும்பினர் ஆதலானும், ஆசிரியர் தரும் ஒறுப்புக்களையும் மாணாக்கர்கள் விருப்போடு ஏற்றுத் திருந்தினர் ஆதலானும் இவ்வெடுத்துக் காட்டு விருப்பாய் ஏற்றலுக்குத் தரப்பட்டது. பிரயோக விவேகத்தின்கண்ணும் (13) இவ்வெடுத்துக்காட்டே உள்ளது.

‘அருந்தவர்க்கு ஊண் கொடுத்தான் என்புழி, அருந்தவர் ஆர்வத்தோடு கொண்டமையானும், கருத்தா ஆர்வத்தோடு கொடுத்தமையானும், ஆர்வக்கோளி ஆயிற்று. விருந்தினர்க்கு இடம் கொடுத்தான் என்பதும் அது’ - வீரசோழியும் 40 உரை.

கள்ளன் வேறுவழியின்றிக் கசையடியை வெறுப்போடு ஏற்பான்.

உடன் பிறந்தாள் மகனுக்குத்தன் மகளை மணம் செய்து கொடுத்தல் அக்கால வழக்குப்பற்றி அமைந்தது. மகன் தந்தையின் அரசைத் தன் பிறப்பு உரிமையால் கொள்ளும் மரபு இருந்தது. அரசர்க்குத் திறை கொடுத்தல், தாராக்கால் ஒறுப்பர் என்ற அச்சத்தால் நிகழ்வது. பெற்றோருக்குத் திதி கொடுக்குங் கால், வேறு ஒருவனைத் தன் தந்தையாகவும் தாயாகவும் அந் நேரத்தில் மந்திர விதியால் கற்பனை செய்துகொண்டு கொடுப்பதாகலின், பாவனையாற் கொடுத்தல் எனப்பட்டது. 24

கொள்வோனது புறனடை

37கொள்வோனை இன்னும் கூறின் பெருகும்.                    25

நீக்கத்தின் வகைகள்

38*நிலைத்திணை இயங்கு திணைபண்பு ஆதியின்
நீக்கம் வருமென நிகழ்த்தினர் புலவர்.

[வி-ரை: ஐந்தாவதன் நீக்கப் பொருண்மை நிலத்திணை, இயங்குதிணை, பண்பு என்பனவற்றை நிலைக்களமாகக் கொண்டு


* நன்னூல் 299. முனிவர் உரை.