பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 17219

வேர்வையைத் துடைத்தான்;

சோற்றைப் பிசைந்தான்;

- என வரும். மேல் அசேதனம் செய்வினைக்குக் காட்டும் உதாரணங்களுள் பொருந்துவன எல்லாம் கொள்க. (இவை மறுமைக்கு நன்மையோ தீமையோ தாராமையின் ‘வெறுவினை’ எனப்பட்டன.)

எல்லா வினையும் இரு வினையுள் அடங்குமேயன்றி, வெறு வினை கூட்டி மூவினை என்ற நூல் வழக்கு இல்லையே எனின், பட்டணத்துப் பிள்ளையார், வினைகளை வரம்பு செய்யுமிடத்து,

‘செய்தன சிலவே; செய்வன சிலவே;
செய்யா நிற்பன சிலவே; அவற்றிடை
நன்றென்ப சிலவே; தீதென்ப சிலவே;
ஒன்றினும் படாதன சிலவே’.

- என மூவினை கொண்டார். அன்றியும் பரிமேலழகர் பயன்வினை, வெறுவினை என இரண்டு கொண்டு, பயன்வினையைப் பல விடத்தினும் பலவாக விரித்து. வெறுவினையை,

‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’                                  - கு. 377

என்பதனுள் கொண்டார். அன்றியும், மூவினை கொள்ளாக்கால், யாம் காட்டிய உதாரணங்களுக்கு வேறு விதி இல்லை என்க. அம்மூவினையுள்ளும் நல்வினையும் தீவினையும் சிலவே, வெறுவினை பலவே எனக்கொள்க. இக்கருத்து நோக்கியே அவர் நன்று தீது என ஒருமைப்பாலாகவும், ஒன்றினும் படாதன எனப் பன்மைப்பாலாகவும் கூறினார் என்க.

[வி-ரை: தான் முயன்று தொகுத்த பொருள்களைத் துய்க்க இயலாமை வெறுவினை எனக் கொள்க.

‘‘வெறு முயற்சிகளால் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது; அதற்கு ஊழ் வேண்டும்’’ - பரி, உரை]

3அறிந்து செய்வினை அறியாது செய்வினை
அசேதனம் செய்வினை எனவே அமர்ந்து

அறிந்து செய்வினை, அறியாது செய்வினை - வெளி