[வி-ரை: தூசியோடு பாலைப் பருகினான். பாலைப் பருகுதல் - அறிந்து செய்வினை; தூசியை உண்ணல் - அறியாது செய்வினை.] அசேதனம் செய்வினையாவது, அறிவற்ற பொருளினது வினை. எ-டு: விளக்குக் காட்டிற்று. இருட்டு மறைத்தது. விடம் கொன்றது. கள்ளு மயக்கிற்று. மருந்து பிழைப்பித்தது. பூமி தாங்கிற்று. ஆற்றுநீர் ஈர்த்தது. தீச் சுட்டது. காற்று அலைத்தது. உதிர்த்தது நிழல் ஓடிற்று, திரும்பிற்று, நீண்டது, குறுகிற்று. கரும்பு இனித்தது. வேம்பு கசந்தது. - என வரும். 4 | தீவினை நல்வினை சிலமுறை திறம்பி
|
முறை திறம்பலாவது மாறுபட்டு நிற்றல். எ-டு: சம்பந்தர் எண்ணாயிரவரைக் கழுவில் ஏற்றினார். சுந்தரர் ஆண்டவனைத் தூதாக அஞ்சாது நடத்தினார். அப்பர் தாம் கொண்ட (சமண) விரதம் அழித்தனர். சாக்கியர் கடவுளை நாடொறும் கல்லால் எறிந்தார். திண்ணனார் ஆண்டவன் தலையில் அடியால் மிதித்தனர். - இவை தீவினை நல்வினையாயின. |