| வினையியல் - நூற்பா எண். 17 | 221 |
அநங்கன் அலரை அரனிடத்து இட்டான். இல்வலன் வாதாபி இருவரும் வந்த பெரியோர்க்கெலாம் வழிபடுமுறையே வழிபட்டிருந்தார். வேங்கை வரிப்புலிக்கு விடத்தைத் தீர்த்தான். பாம்புக்குப் பால் வார்த்தான். வலையனுக்குத் தூண்டில் வழங்கினான். கள்ளனுக்குச் சோறு இட்டான். -இவை நல்வினை தீவினையாயின. நெஞ்சில் துறவார்’ - கு. 276 ‘அடங்கலர்க்கு ஈத்த தானப் பயன்’ சீவக. முத்தி-244 கணவன் இழந்தோர்கட்கும், கண்ணிகுத்தித் திரியுமவர்க்கும் துயருக்கு இரங்கினான். -இவை போல்வனவும் அது. இல்விரண்டனையும் கூட்டி அரனடிக்கு அன்பர் செய்யும்’ ‘விபரீதமாம்’ எனப் பலரும் கூறினர். [வி-ரை: நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல் ’ - கு. 376
நெஞ்சால் பற்றாது வைத்து, பற்றற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுமவர்போல வன்கண்மையை உடையார் உலகத்தில் இல்லை. தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, யாம் மறுமைக்கண் தேவராதற் பொருட்டு இவ்வருந்தவருக்கு இன்னது ஈதும் என்று அறியாத ஈந்தாரை அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். அவர் இழிபிறப்பினராதல், அடங்கலர்க் கீந்த தானப் பயத்தினால் அலறு முந்நீர்த் தடங்கடல் நடுவுள் தீவு பலவுள அவற்றுள் தோன்றி உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் மடங்கலஞ் சீற்றத் துப்பின் மானவேல் மன்னர் ஏறே. -சீவக. முத்தி. 244
என்பதனான் அறிக. -பரி. உரை. |