இதனுள், வஞ்சித்து வாழ்வார்க்கு இல்லறத்தார் தானம் செய்தல் - நல்வினை தீவினையாயிற்று. அரனடிக்கு அன்பர் செய்யும் பாவமும் அறம தாகும் பரனடிக்கு அன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும் வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி நரரினில் பாலன் செய்த பாதகம் நன்மை ஆய்த்தே. சிவ.சித்தி.எ.பா. 119 பாலன் - சண்டேசன். பிதாவைக் கொலை புரிந்தான் எனப்படுவானும் அவனே. தலையிழந்தான் எவ்வுயிரும் தந்தான் பிதாவைக் கொலை புரிந்தான் குற்றம் கடிந்தான் - உலகில் தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேல் தப்பாம் வினையும் விபரீத மாம். தண்டி, எடுத்துக்காட்டு] 5 | செய்யா இருவினை செய்வினை ஆகி
|
செய்யா இருவினை செய்வினை ஆகும் என்பது என்னை யெனின், ‘அறவினை யாதெனின் கொல்லாமை’ -கு. 321 ‘நோன்புஎன் பதுவே கொன்றுதின் னாமை’ அழுக்காறாமை, வெகுளாமை, பெரியாரைப் பிழையாமை முதலாக, விலக்கினவற்றைச் செய்யாமையே நல்வினை செய்தல். பெரியோரைக் காணில் இருக்கை எழாமை, எதிர் செல்லாமை; ஒருவனையாறு ஈர்த்த வழியும் விடம் தீண்டின வழியும் அவ்விடர் தீர்க்கும் வல்லன் தீராமை; தலைவியைப் புல்லுதற்கு விதித்த நாளில் புல்லாமை; முதலாக விதித்தனவற்றைச் செய்யாமையே தீவினை செய்தல் எனவரும். ‘துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர்’ - கு. 1165 என்பதுவும் அது. |