| வினையியல் - நூற்பா எண். 17 | 223 |
[வி-ரை: துயர் வரவு நட்பினுள் ஆற்றுபவர் என்பது, நட்பாய் இருக்குங் காலத்திலேயே நண்பருக்குத் துன்பம் உண்டாதலைச் செய்பவர் என்னும் பொளதாய். தூது அனுப்புதற்கு உரிய தோழி தலைவனிடத்துத் தூது அனுப்பாமையைத் தலைவி குறிப்பிடும் சந்தர்ப்பத்தில் அமைந்த சொற்றொடராதலின், இது போந்த பொருளால் செய்யா நல்வினை செய்யும் தீவினை ஆயினவாறு.] 6 | செய்இரு வினையே செய்யா வினையாய்
|
செய்யிரு வினையே செய்யாவினை என்றது என்எனின், மெய்யுணர்வு உடையோர் எவ்வினை செய்யினும் அவ்விருவினை செய்யாமையாகும் என்று ஆகமம் மறை எல்லாம் இயம்பும். இன்னும் பலவாம் இலக்கணம் பெறுமே ‘இன்னும் பல’ என்றதனால், நடக்கின்றான், படிக்கின்றான் (நடந்துகொண்டே படிக்கின்றான்) - எனக் கலத்தலும், உண்கின்றான், உறங்குகின்றான் (இவை ஒரே நேரத்தில் நிகழ்வன அல்ல) - எனக் கலவாமையும், விளக்குக்காட்டிற்று, கண்கண்டது - என ஒன்றனை விட்டு ஒன்று நில்லாமையும், சோற்றை முக்காற்கூறு உண்டு, காற்கூறு உண்டற்கு முன்னே ஒரு நிமித்தத்தால் உணல் ஒழிந்தான் - என அம்முக்காற் கூற்று வினை பயன்படுதலும், நெற்பயிர் முக்காற்கூறு முறையே வளர்ந்து, காற்கூறு விளைதற்கு முன்பே மழையின்றி விளைவு ஒழிந்தது - என அம் முக்காற்கூற்றில் சிறிதாயினும் வினை பயன்படாமையும் முதலாயின எல்லாம் கொள்க. இவ்விரு சூத்திரவிதியும் தமிழ் வழக்கு அன்று; வடநூல் வழக்கு என்க. 17 |