பக்கம் எண் :

246இலக்கணக் கொத்து 

[வி-ரை: பொது எழுத்து என்பவை தமிழிற்கும் வட மொழிக்கும் பொதுவான எழுத்துக்களாம். சிறப்பெழுத்து என்பவை தமிழிற்குச் சிறப்பாக உள்ள - ற, ன, ழ, எ, ஒ என்ற எழுத்துக்களாம்.

‘‘நிலம் நீர் வளி விண் எனவும், என்று எறி ஒன்று ஒறு கொன்றை கொறி வென்றி வெறி எனவும், வாழை மழை சோறு கூறை எனவும் தமிழ் இம்மூன்று பாகுபாடும் பெறும் ஆயினும், இவை வடமொழிக்கண் சென்று வழங்கித் திரியாதும் திரிந்தும் பொருள் ஒன்றாகாமையின் தற்பவம் தற்சமம் ஆகா என்க.’’ பி. வி. 2. உரை. 2

மொழி வருவித்து முடித்தல்

89அதிகார ரத்தால்1 அவாய்நிலை தன்னால்2
ஓர்சொற் பொருளை உறுத்தற் பொருட்டால்3
செய்யுள் விகாரத் தால்4சிதைந் ததனால்5
அறுவகைப் பொருளின் அத்தொகை தன்னால்6
இடையில் உள்ளன எல்லாம் மறைதலால்7
இன்னும் பலபல ஏதுவி னாலும்8
மொழிவரு வித்து முடித்தனர் கொளலே.
 

1அதிகாரத்தால் மொழி வருவித்தலாவது

அவற்றுள் அ, இ, உ, எ ஒக்குறில் ஐந்தே’ - ந. 64 என்புழி நின்ற ‘அவற்றுள்’ என்னும் சொல்லை, ‘சிறப்பினும் இனத்தினும்’ ந. 74 என்ற நூற்பா முடியப் பத்துச் சூத்திரத்திற்குத் தனித்தனியே வருவித்தலும்,

‘அன் ஆன் இறுமொழி ஆண்பால் படர்க்கை’ - ந. 325 என்புழி நில்லாத வினை வினைக்குறிப்பு உடன்பாடு எதிர்மறை முற்றுக்களாம் என்னும் சொற்கள் முதலாகப் பல சொற்களை ‘வேறு இல்லை உண்டு ஐம் பால்மூ விடத்தன’ ந. 339 என்னும் சூத்திரம் வரை பொருத்தம் அறிந்து தனித்தனியே வருவித்தலும் போல்வன.