பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 3247

[வி-ரை: ஓரிடத்தில் நின்ற சொல் பல சூத்திரங்களோடு சென்று இயைதலை அதிகாரம் என்று குறிப்பிடும் கருத்துப்பற்றி இவ்வெடுத்துக்காட்டுக்கள் தரப்பட்டுள்ளன. ‘அதிகாரத்தால் வருவித்து முடிப்பதனை அனுஷங்கம் என்று கூறுவர்’. - பி.வி. 50 உரை]

2அவாய்நிலையான் மொழி வருவித்தலாவது

‘இயம்புவன் எழுத்தே’ - யான்                                       - ந 56

‘அறைகுவன் சொல்லே’ - யான்                                     - ந 258

என்றாற்போல்வன.

[வி-ரை: தொடர் மொழிகள் அவாய்நிலை முதலிய மூன்று பொருத்தத்தான் புணர்தல் 105 ஆம் நூற்பாவில் விளக்கப்படும். ‘அவாய் நிலையான் வருவித்து முடிக்கும் சொல்லை அத்தியாகாரம் என்று கூறுவர்’. பி.வி.50 உரை.]

3ஓர் சொற்பொருளை உறுத்தற் பொருட்டால்
மொழி வருவித்தலாவது

ஊழ் என்னும் சொற்கு விதி, பொறி, வினை முதலிய சொற்களுள் ஒன்றனைக் கூறலே பொள்படுதலாய் இருக்க, ஊழ்-அஃதாவது இருவினைப்பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி’ என்றாற்போல்வன.

[வி-ரை- நிருவசனம் அல்லது நிருத்தி என்பதாவது ஊழ்-அஃதாவது இருவினைப்பயன் செய்தவனையே சென்று அடைதற்கு ஏதுவாகிய நியதி என ஒரு சொற்கு வாக்கியத் தொடராகப் பொருள் உணர்த்துவது என்க. குடந்தம் என்பதற்குக் ‘குடந்தம் கைகூப்பி மெய்கொட்டி நிற்றல்’ எனச் சூத்திரமாகக் கிடப்பதூஉம் அது. இவ்வாறு மெய்பாட்டியலுள்ளும், தண்டியலங்காரச் சூத்திரத்துள்ளும் ஒவ்வொரு சொற்களைப் பிரித்துப் பிரித்துக் கூறுவர்’’, - பி. வி. 50 உரை.]