பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 3249

6அறுவகைப்பொருளின் அத்தொகை தன்னால்
மொழி வருவித்தலாவது

முறிமேனி என்புழி முறிபோலும்மேனி என்று அமையாது, மாவினது தளிரினது நிறத்தையும் அந்தளிரினது தட்பத்தையும் போன்று கண்ணுக்கும் மெய்க்கும் இன்பத்தைக் கொடுக்கும் மேனி என்றாற்போல்வன. அறுவகைப்பொருளினாலும், அத்தொகை தன்னாலும் என இருபொருள்கொண்டு, இவ்வுதாரணத்தை பின்னதற்காக்கி முன்னதற்கு உதாரணம் அறுவகைப்பொருளும் விரிந்து நின்றவிடத்தும் இங்ஙனம் மொழிகளை வருவித்தல்போல்வன எனக்கோடலும் ஒன்று.

வி-ரை தாயொடு மூவர் - தாயொடு கூடிய மூவர், கரும் பிற்குவேலி - கரும்பிற்குக் கட்டிய வேலி என்றாற்போல விரியிலும் மொழி வருவித்தல் காண்க.]

7இடையில் உள்ளனஎல்லாம் மறைதலால்
மொழி வருவித்தலாவது

‘அயன் உயர் சதாசிவன் அதிகாரத்தார்’ (சி. சி. 144) என்புழி அரி அரன் மகேச்சுரன் என (அதிகாரத்தார் என்பதனால் வருவித்தல் போல்வன.

‘பிருதிவி நாதம் பிறக்கும் மாயையின்’

‘அஒள உயிரே’

‘கன உடம்பாகும்’

என்றாற்போல்வனவும் அது.

[வி-ரை: முதலிலுள்ள பிருதிவியையும் இறுதியில் உள்ள நாதமான ஆகாயத்தையும் குறிப்பிடவே இடையிலுள்ள அப்பு, தேயு, வாயு என்பன கொள்ளப்படும்.

‘அ ஒள’ எனவே, இடையிலுள்ள ஆகாரம் முதல் ஓகாரம் ஈறாகிய உயிர்கள் கொள்ளப்படும்.

‘கன’ எனவே, இடையிலுள்ள ஙகாரம் முதலாக றகாரம் ஈறாகிய மெய்கள் கொள்ளப்படும்.