‘அச்சு அல் என்பன பிரத்தியாகாரம் செய்த பெயர். பிரத்தியாகரித்தலாவது ககரம் முதல் னகரம் இறுவாய்ப் பதினெண் எழுத்திற்கும் ஆதியிலே நின்ற ககரத்தையும் அந்தத்திலே நின்ற னகரத்தையும் கூட்டி, கன எனப் பெயரிட்டாற்போல்வது; யரள வழள என்னும் ஆறெழுத்திற்கும் யள எனப் பெயரிட்டாற்போல்வது.’ பி. வி. 4. உரை.] 8 | இன்னும் பலபல ஏதுவினான் மொழி வருவித்தல்
|
தொல்காப்பியப் பொருளதிகார உரையில் பெரும்பாலும் வரும். இங்ஙனம் விரிக்கின் பெருகும். [வி-ரை: அகச்செய்யுள்களுக்கும் புறச்செய்யுள்களுக்கும் கரும நிகழ்ச்சி கூறுமிடத்தும், கூற்றெச்சம் குறிப்பெச்சங்களை விரித்துக்கொள்ள வேண்டுமிடத்தும் பெரும்பாலும் மொழி வருவித்தல் நிகழுமாறு காண்க.] ‘பிறிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே’ - குறுந். 17 ‘நல்லார் புனைவரே’ சி. போ. வாழ்த்து. என்புழி யானும் அதுசெய்வேன் எனப் பொருள்கொள்ளுதல் குறிப்பு. [வி-ரை: இத்தலைவியைத் தவறாமல் கோடற்பொருட்டு மடலேறுவேன் எனத் தலைவன் கருதியதாகப் பொருள் கொள்ளுதலும், ‘கல்லால் நிகழ்மலை, வில்லார் அருளிய, பொல்லார் இணை மலர், நல்லார் புனைவரே’ ஆதலின் என் செயலும் முட்டின்றி முடிய விநாயகப் பெருமான் திருவடிகளை வணங்குவேன் எனப் பொருள் கொள்ளுதலும் குறிப்பு.] ‘கருநாய் கவர்ந்த காலர் சிதகிய பானையர்’ திவ். பிர. 3007. என்புழி ஆய் எனப் பொருள் கொள்ளுதல் வினையெச்சமானது வினைக்குறிப்பு முற்றாய்த் திரிந்தது. ‘குறிப்பு முற்று ஈரெச்சமாகலும் உளவே’ - (ந. 351) என்பதனால் முற்று எச்சமாய்த் திரிந்தது அன்றோ எனின், அவர் |