பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 3251

‘அன்றி இன்றி என் வினை எஞ்சு இகரம்
தொடர்பினுள் உகரமாய் வரும்’                                     - ந 173

என்று கூறினார்; அதனை மறந்து கூறுதலால் அன்று என்க. அவர் இதுவேயன்றிப் பலவிடத்தினும் மறந்தார். அன்றியும் இறைவன் நீங்கலான எல்லா ஆசிரியர்க்கும்

‘மறவி இனைய உடல்கொள் உயிர்க்குணம்’                            - ந 452

என்பதனாற் பொது. அவரவர் மறவிகளை விரிக்கின் பெருகுதலானும், அறிதல் அருமையானும் பெரியோர்க்குக் குற்றம் கூறினான் என்னும் குற்றம் வருவதலானும் விரித்திலம் என்க. இம்மறவி வருதற்குக் காரணம் தன் வசம் சிறிதாயினும் இன்றி ஊழ் என்னும் பரவசாமாயே நடத்தல் என்க. இக்கருத்து நோக்கியே பாயிரத்துள்,

‘மறப்பு எனும் பகைவன் வாரிக் கொண்டனன’்,என்றாம்.                  இ.கொ.6

‘இரும்பார்க்கும் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்’                        - ந. 122 

‘சேனைத் தலைவராய்’                                              - நா. 3 

என்பன போல நின்றன கெடுதல் விகாரப்பட்டு நின்றன என்பாரும், ஆய் என்னும் மொழி வருவிக்க வேண்டும் என்பாரும் உளர். இங்ஙனம் வருவன எல்லாம் மொழி வருவித்தல் என்னும் இலக்கணமன்று.

இவ்விரண்டிற்கும் வேறுபாடு என்னெனின், முன்னது மொழி வருவித்தற்கு முன்பே சொல்லாவது பொருளாவது சொற்பொருள் கூடியாவது முடியாது கிடக்கும்; பின்னது மொழி வருவித்தற்கு முன்பே சொல்லும் பொருளும் முடிந்து கிடக்கும்.

[வி-ரை: கருநாய் கவர்ந்த காலர் சிதகிய பானையர் என்புழிக் காலராய் - பானையராய் என்றிருந்த வினையெச்சங்கள் காலர் - பானையர் என வினைமுற்றாய்த் திரிந்தன என்பது இவ்வாசிரியர் கருத்து. வினையெச்சமே வினைமுற்றாய்த் திரியும் என்னும் நச்சினார்க்கினியரைப் பின்பற்றுபவர் இவர். ‘அன்றி இன்றி’ என்னும் நூற்பாவில் அவ்வினையெச்சங்கள் அன்று இன்று என முற்றாய்த் திரிதலை ஏற்றுக்கொண்ட நன்னூலார், வினையியலின் இறுதியில் வினையெச்சம் வினை முற்றாகும் என்று முன்பு