| ஒழிபியல் - நூற்பா எண். 19, 20 | 285 |
‘‘தனிநிலைச்சொற்கள் தகுதி முதலாகிய மூன்றும் தோன்ற அல்வழியாக, வேற்றுமையாக அவ்வப்பொருள்மேல் பிளவுபட்டு இசையாது தம்முள் கூடுவது தொகை நிலையாம், பிளவுபட்டு விரிந்தது தொகாநிலை. வாக்கியங்களும் தகுதி முதலிய மூன்றும் தோன்ற வரும். தூரான்வயம் முதலாகிய நான்கும் அண்மை நிலையோடல்லது வாரா என்றவாறு ... .... ... இக்கருத்தேபற்றித் தொல்காப்பியரும் ‘நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும்’ (தொ. எ. 107) என்றார். தூரான்வயச்சொல் - ஆற்றொழுக்கும் அடிமறிமாற்றும் அல்லாத சுரையாழ அம்மி மிதப்ப’ - ‘நல்ல படாஅ பறை’ - முதலிய எழுவகை பொருள்கோள் இலக்கணம் பெற்ற செய்யுட்கள். மரூஉத்தொகையாவது - முன்மாலை, பின்மாலை, அரைக்காசு என்பன. கட்டிய சொல்லாவது - முயற்கோடு, கூர்மரோமகம்பலம், கரதலரோமபாசம், துன்னூசிக்குடர் என்பன. சார்ந்த சொல்லாவது - இடைப்பிறவரல் சூத்திரத்து உதாரணங்களாம். இடைப்பிறவரலுள் சிறுபான்மை பொருந்துவனவும், முழுதும் பொருந்தாதனவும் உள -. -. இவையெல்லாம் அண்மைநிலை அல்லது பெறா என்க’’ - பி. வி. 19, உரை. ‘‘தொடர்மொழி யாவது அவாய்நிலையானும். தகுதியானும், அண்மை நிலையானும் இயைந்து பொருள் விளக்கும் தனி மொழி ஈட்டம்’’ - தொ. சொ. 1 சேனா. ‘‘தொடர்மொழி பயனிலை வகையானும் தொகைநிலை வகையானும், எண்ணுநிலை வகையானும் தொடரும். இனி, வடநூலார் கூறியவாறே அவாய்நிலையானும் தகுதியானும் அண்மைநிலையானும் தொடரும் என்பதாம்’’ - தொ. சொ. 1நச்.] 19 புணர்ச்சியின் நால்வகை 106 | பொருத்தப் புணர்ச்சி பொருத்தமில் புணர்ச்சி அவ்விரு வகையும் ஒருங்கியல் புணர்ச்சி எனமூன்று என்பர் புணர்ச்சி இயல்பே; வழுவுடைப் புணர்ச்சியை மறாவழி நான்கே.
|
|