பக்கம் எண் :

284இலக்கணக் கொத்து 

அண்மை நிலையாவது -

சோறு கடல் முழங்கிற்று உண்டான்-

என இடையில் பிறசொற்கள் வந்து பொருந்தற்கு இடம் கொடாமல் தம்முள் அணுகிச் சோற்றை உண்டான் என நிற்றல்.

இவ்வண்மைநிலை இலக்கணம் உணராதார் இடையில் பொருத்தில், அதனைச் சான்றோர் ‘ஒன்றனையும் குற்றம் கூறோம்’ என்னும் நியமத்தால், யாப்புவிதி நோக்கி வந்தது என்றும், மொழிமாற்று முதலிய பொருள்கோள் இலக்கணம் நோக்கி வந்தது என்றும், இடைப்பிறவரல் நோக்கி வந்தது என்றும், இன்னும் யாதானும் ஒரு பெயரை இட்டுச் சோற்றை உண்டான் - கடல் முழங்கிற்று - எனப் பிரித்து வேறு தொடராக்குவர். இதனைச் சிலர் மறுப்பர். அஃது எங்ஙனமெனின், நாற்குலத் தலைவரும் நாற்குல மகளிரும் தனித்தனியே இருவர் இருவராய்க் கிடப்பின் புல்லுதல் கூடும். இம்முறையன்றி நான்கு தலைவரும் ஒருநிரையே பின்பு நான்கு குலமகளிரும் ஒருநிரையேயாக எண்மரும் அம் முறையே கிடப்பின், புல்லுதல் கூடாது இவ்வுவமை முதலாகப் பல உவமைகளைக் கூட்டிச் சொல்தொடர்பு உண்டு என்றால் மாத்திரமே அன்றிப் பொருள் தொடர்பு சிறிதாயினும் கூடாது என்று உபமேயம் கூறி மறுப்பர். இவ்வண்மைநிலை விதியானது தகுதி அவாய்நிலையைக் காட்டிலும் மிகவும் விரியும் என்க. தொல்காப்பியர் இம் மூன்றனையும் உள்ளடக்கி, ‘நிறுத்த சொல்லும் குறித்துவருகிளவியும்’ (தொ. எ. 107) என்றார்.

[வி-ரை: பிரயோக விவேகம் 19ஆம் காரிகையை நோக்குவோம்.

‘‘ஆக்கிய சொற்கள் தகுதி அவாய்நிலை அண்மைநிலை
நோக்கிய மூன்றும் பெறச்சேர் வதுதொகை நுண்புலவோர்
வாக்கிய மும்அது தூரான் வயச்சொல் மரூஉத் தொகைச்சொல்
நீக்கிய கட்டுரை சார்ந்தசொல் அண்மை நிலைபெறுமே’’              - பி. வி. 19