| ஒழிபியல் - நூற்பா எண். 18, 19 | 283 |
7. ‘ணனஃகான் முன்னர்’ - தொ. எ. 26 ‘லளஃகான் முன்னர்’ - தொ. எ. 24 என்புழித் தொடர்பினுள் - (செய்யுளில்) ‘அ’ சாரியையும் கான் சாரியையும் வந்தன. ஓர் எழுத்திற்கு ஒரு சாரியையும், ஓரெழுத்திற்கு இணைந்து இரு சாரியையும், இணை ஈரெழுத்திற்கு ஒரு சாரியையும் வருதல் பற்றிக் ‘கலந்து’ என்றாம். தொடர்மொழியின் புணர்நிலை வகை 105 | தகுதி அவாய்நிலை அண்மைநிலை மூன்றும் புணரப் புணர்வது புணர்ப்பெனப் புகல்வர்.
|
தகுதி - சோற்றை உண்டான் என்புழிச் சோறு என்னும் பதம் உருபு வருமொழிகளோடு புணர்தற்கு முன்பே தானே தனித்து ஓர் ஆதாரம் இன்றியே நிற்பினும், இறிஞி, மிறிஞி போலப் பொருள்அற்ற சொல்அன்றாய், பொருளும் வினைமுதல் - கருவி முதலிய பொருள் அன்றாய், இன்னும் பல குணங்களோடு கூடி நிற்றல். [வி-ரை: தகுதி - சோறு என்பது உண்ணப்படுவது என்னும் பொருளதாய்த் தன்பொருள் முடிதற்கேற்ற வினைக்குச் செயப்படுபொருளாய் வருவது முதலிய தகுதியோடு இருக்கும் என்பது.] அவாய்நிலை - சோறு என்னும் அத்தனிப்பதம் தனக்கு உரிய ஐ - உருபையே விரும்புதலும் அன்றி, ஒரு வினைச் சொல்லினையும் விரும்புதல் முதலாகிய அவாவோடு கூடி நிற்றல். [வி-ரை: ஒருசொல் தன்பொருள் நிரம்புதற்கு வேறொரு சொல்லையோ, சொற்களையோ அவாவி நிற்பது அவாய்நிலை] |