| ஒழிபியல் - நூற்பா எண். 32 | 321 |
அடங்காவழி கொண்டது என் எனின், அலி, பேடு, உலகம், தெய்வம் முதலியவற்றிற்குச் சொற்பொருள் திணைபால் முதலிய தொடுக்கின் சிறப்புமன்று, பொதுவுமன்று; ஒன்றினும் அடங்காவழி போல என்க. [வி - ரை: அலி முதலிய நான்கும் சொல்லால் அஃறிணை. அதுபற்றி அலி, பேடு, உலகம், தெய்வம் - வந்தது முதலான அஃறிணை வினை கொண்டு முடிக்கப்படலாம். பொருளால் உயர் திணை ஆதலின் அலி வந்தான், பேடு வந்தான் என ஆண் பாலாகவும் வரும். உலகம் தெய்வம் என்பன ஈறு திரிந்து வாய்பாடு வேறுபட்டு உலகர் பசித்தார், தேவர் வந்தார் எனவும் வரலாம். நேரிய முடிபின்மையின் இவை ‘அடங்காவழி’ எனப்பட்டன.] வேற்றுமை அல்வழிக்கு உதாரணம் வெளிப்படை, ஏனைய வற்றிற்கு உதாரணம் பின்வருமாறு: அஞ்செவி, அங்கை, கருப்புவேலி, உரைநூல், நூலுரை’ மதிமுகம், முகமதி, புலி கொன்றது நாய் கடித்தது போல்வன எல்லாம் பொதுவழிச் சந்தி. வி-ரை: சொற்கள் | அல்வழி | வேற்றுமை | அஞ்செவி | அகமாகிய செவி | செவியது அகம். | அங்கை | அகமாகிய கை | கையது அகம். | கருப்புவேலி | கரும்பாகிய வேலி | கரும்பிற்கு வேலி. | உரைநூல் | உரையாகிய நூல் உரைக்கும் நூல் | உரையை உடைய நூல் | நூல் உரை | லாகிய உரை | நூலினது உரை. | மதிமுகம் | மதிபோன்ற முகம் மதிக்கும் முகம் | மதியைப்போன்ற முகம் | புலி கொன்றது | எழுவாய்த் தொடர் | புலியைக் கொன்றது, புலியால் கொல்லப்பட்டது. |
|