நாய் கடித்தது | எழுவாய்த் தொடர் | நாயைக் கடித்தது, நாயால் கடிக்கப்பட்டது. | முகமதி | முகமாகிய மதி் | முகத்தை ஒக்கும் மதி் |
என இருவழிக் கண்ணும் வருதலின் பொதுவழிச் சந்தி ஆயின.] பொருபடை, கருங்குதிரை, படை படை, பஃபத்து, வயிறு மொடுமொடென்றது, முன்றில்முயற்கோடு, சாத்தன் சோற்றைப் பகற்கண் பசித்து விருந்தோடு உண்டான் - இவை போல்வன வெல்லாம் அடங்காவழிச் சந்தி. [வி-ரை: பொருபடை, கருங்குதிரை என்பன முறையே வினைத்தொகை பண்புத்தொகை என்பர் தமிழ் நூலார்; பொருபடை பொருவதாகிய படை என்பர் வடநூலார். கருங்குதிரை என்பது கரிதாகிய குதிரை என விரிதலேயன்றிக் கரியதுகுதிரை எனவும் விரியும் என்பர். படைபடை அடுக்குத்தொடர் என்பர். நிலைமொழி வருமொழிச்சந்திக்குத் தனிப்பட்ட பொருள் இயைபு இன்று. பஃபத்து - பத்தாகிய பத்து - பத்தான் உறழ்ந்த பத்து என்று பொருள் தராது, தனித்தனியே பத்து, பத்து என்று பொருள்படுதலின், ‘தம்மியல் கிளப்பின் தம்முன் தாம் வரும் எண்ணின் தொகுதியாம்’ (தொ. எ. 482) நிலைமொழி வருமொழி இரண்டும் பொருள் இயைபின்றிச் சேர்ந்தன. மொடு மொடென்றது - குறிப்பு; சொற்களுக்குத் தனித்த பொருளே இன்று. இல் முன் என்பன நிலைமாறி முன் இல் என்றாகிப் பொருள் நோக்கமின்றியும் சந்தியால் விகாரம் பெற்றன. முயற்கோடு - நிலைமொழி வருமொழிப் பொருட் பொருத்தம் இன்று; முயலுக்குக் கோடு என்பது பொய்ப்பொருள் ஆகலான். சாத்தன் ... ... உண்டான் - தனித்தனி நிலைமொழி வருமொழி களுக்குப் பொருட்பொருத்தம் இன்று; |