பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 38333

சாத்தனை வரைவிற்கு வடக்கு அனுப்பினான்; கொற்றனை இழவுக்குக் கிழக்குப் போக்கினான்; தேவனை நெற்கொள்ளத் தெற்கே ஏவினான்; பூதனைத் தேன் விற்க மேற்கே செலுத்தினான் - இவையெல்லாம் ஒருவன் வினையே ஆயினும் ஒன்றற்கொன்ற மறையாய்ப் பொருத்தம் இன்மையால் பல தொடரேயாம் என்க. இக்கருத்துப் ‘பேசரிய வராகம்’ என்னும் செய்யுளுள் காண்க.

இவற்றை வடநூலார் ஏக வாக்கியம், பின்ன வாக்கியம் என்பர்; அதனால் மொழி பெயர்த்தனம் என்க.

[வி-ரை:

‘கானவர் இரிய வில்வாய்க் கடுங்கணை தொடுத்தலோடும்
ஆனிரை பெயர்ந்த ஆயர் ஆர்த்தனர் அணிந்த திண்தோள்
தானொன்று முடங்கிற்றொன்று நிமிர்ந்தது சரம்பெய் மாரி
போல் நின்ற என்ப மற்றப் பொருவரு சிலையி னாற்கே’             - சீவக. 454

இவ்வாறு வரும் முற்றுக்களை முற்றாகவே பொருளுரைக்கில் ஏக வாக்கியம் ஆகாது பின்ன வாக்கியமாகிப் பொருள் சித்தியாது என்க. பி.வி. 39 உரை

சிலையினாற்குத் திண்தோள் தான் ஒன்று முடங்க, ஒன்று நிமிர, சரம், பெய்மாரி போல் நிற்பக் கணை தொடுத்தலோடும் நிரை பெயர ஆயர் ஆர்த்தனர் என வினையெச்சமாக்கிப் பொருள் கொள்க.

‘பேசரிய அராகம்தம் கன்மத்துக் கீடாப்
பெற்றதனில் ஆசைதனைப் பெருவிக்கும் நியதி
தேசமிகும் அரசர்தரும் ஆணை செய்தி
செய்தவரைத் துய்ப்பிக்கும் செய்கை போல
நேசமுறு தம்கன்மம் நிச்சயித்து நிறுத்தும்
நிகழ்காலம் கழிகாலம் எதிர்காலம் என்றே
ஓசைதர வருங்காலம் எல்லைபலம் புதுமை
உறுவிக்கும் இறைசத்தி உடனாய் நின்றே’
-சிவ2,3,22