| ஒழிபியல் - நூற்பா எண். 35 | 343 |
பேராசிரியர் குறிப்பிடுவார். தொல்காப்பியனார் தம் நூலின் இறுதி நூற்பாவில் உத்திவகை முப்பத்திரண்டும் உத்தி இனம் முப்பத்திரண்டும் குறிப்பிட்டுள்ளார். வெளிப்படை குறிப்பு என்பன - ‘ஒன்றொழி பொதுச்சொல்’ என்பதனால் பெறப்படும். - ந. 269 அன்மொழி - ‘பண்புதொகை வரூஉம் கிளவி யானும்’ என்பதனால் கொள்ளப்படும். - தொ. சொ. 418 ஒட்டு - ‘கருதிய பொருள்தொகுத்து’ -தண்டி 51 என்பதனால் கொள்ளப்படும். ஆகுபெயர் - ‘முதலிற் கூறும்’ - தொ. சொ. 114 ‘அவைதாம், தத்தம் பொருள்வயின்’ ‘அளவும் நிறையும்’ ‘கிளந்த அல்ல’ - தொ. சொ. 115, 116, 117 பொருள்முதல் ஆறோடு’ - ந. 290 என்பனவற்றால் கொள்ளப்படும். உவமை - ‘வினைபயன் மெய் உரு' - தொ. பொ. 276 முதலிய நூற்பாக்களால் கொள்ளப்படும். இறைச்சி ‘உடனுறை உவமம்’ - தொ. பொ. 420 ‘இறைச்சிதானே, ‘அன்புறு தகுந’ இறைச்சியிற் பிறக்கும்’ -தொ. பொ. 229, 30, 31 என்ற நூற்பாக்களால் கொள்ளப்படும். உபசாரம் - ஒன்றனை மற்றொன்கறாக் கூறும் மரபு. ஆசை - விருப்பினால் மிகுத்தும் குறைத்தும் திரியக்கோடல். ஞாபகம் . கூறாததனை அறிவுறுத்தல். |