பக்கம் எண் :

342இலக்கணக் கொத்து 

முன்னம் காரணமாகச் சொற்பொருள் உணர்த்தலை நன்னூலார்,

‘முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே’                          - நன்.408

எனத் தொகுத்தார்.

தொல்காப்பியர்,

‘இவ்விடத்து இம்மொழி’                                     -தொ. பொ. 519

என்னும் சூத்திரத்தால் விரித்தனர். அவற்றுன் காண்க.

உத்தி காரணமாகச் சொற்பொருள் உணர்த்தலைத் தொல் காப்பியர் அறுபத்துநான்கு கூறாக விரித்தனர். அவற்றால் காண்க. ஏனையவற்றை விரிக்கின் பெருகும் என்க.

மெய்ப்பாட்டியலுள் மெய்ப்பாடு காண்க.

ஒட்டுத் தண்டியலங்காரத்துள் காண்க.

‘இறைச்சி தானே பொருட்புறத் ததுவே’

இது தொல்காப்பியம். (பொருள் 229).

‘உணர்ந்ததை மறத்தல் உள்மயக்கு என்ப’

இஃது உரைச் சூத்திரம்.

இப்பொருள்கோள்கள் ஆற்றுநீர் முதலிய ஒன்பதுவகைப் பொருள்கோளினும், இச்சூத்திரத்திற்குப் பின்புள்ள எழுவகைப் பொருள்கோளினும் அடங்கா என்க.

இச்சூத்திரவிதி தொல்காப்பியப் பொருளதிகாரத்தினும், கலித்தொகையினும், பரிபாடலினும், தண்டியலங்காரத்தினும் பெரும்பான்மை வரும். ஏனை இலக்கண இலக்கியங்களில் சிறுபான்மை வரும் என்க.

[வி-ரை:

உத்தி - ‘நூற்பொருள் வழக்கொடு’                                   - ந. 15

என்ற நன்னூலான் அறிக. பட்டாங்கு உரைத்தலே உத்தி எனவும். நுதலிப்புகுதல் முதலியன உத்திவகை எனவும்