| ஒழிபியல் - நூற்பா எண். 43 | 341 |
‘விந்துவின் மாயையாகி’ -சி. சி.1 சூ. 19 இத்தொடருக்குச் சுத்தமாயையிலே நின்றும் அசுத்தமாயை பிறந்து என்றும், சுத்தமாயையைப் போல அசுத்தமாயையும் அநாதியே தனியே ஒருமுதலேயாம் என்றும் கூறுக. பின்னற்குச் சொற்சோதனை ‘பரிதியின் ஒரு தான் ஆகி’ என்க. ‘அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்’ இத்தொடருக்குச் சிவனுடைய சீர்பாத ஞானமானது ஆன்மாவினுடைய ஞானத்தின் கண்ணே கலக்கும் என்றும், ஆன்மாவினுடைய அநாதி ஞானமானது ஆன்மாவினின்றும் வெளிப்படும் என்றும் கூறுக. ‘உடல்உயிர் கண்அருக்கன் அறிவொளிபோல்’ அத்தொடருக்கு முன்புள்ள ‘பொற்பணி போல்’ முதலிய முப் பொருளை மறுத்தற் பொருளைக் கருதி உட்கொண்டு, உடல் உயிர் போல் ஒற்றுமை-கண் அருக்கன்போல் வேற்றுமை - அறிவின் அறிவுபோல் பொதுமை என்றும், பின்பு உள்ள ‘பிரிவு அரும் அத்துவிதம்’ ஆகிய ஒரு பொருளை உடன்படற் பொருளைக் கருதி உட்கொண்டு, உடலும் உயிரும் தோன்றின இடத்துத் தோன்றும் அறிவைப் பிரிக்கப்படாதது போலவும்-கண்ணும் அருக்கனும் கூடின இடத்துத் தோன்றும் ஒளியைப் பிரிக்கப்படாதது போலவும் என்றும் கூறுக செம்பொன்பதின்பலம் முதலாயினவும் அது. அதிகாரம் காரணமாகச் சொற்பொருள் உரைத்தலாவது: ‘கூடில் இன்பம் பிரியின் துன்பம்’ என்னும் தொடர் அகச் செய்யுட்கண்வரின் - தலைவியை தலைவன் புணரில் அளவில் இன்பம்; ஓதல் பகை தூது துணை பொருள் முதலியவற்றால் உடன்படாது நீங்கில் அளவில் துன்பம் என்றும், புறச் செய்யுட்கண்வரின் - கற்றோருடன் கலைபயின் அளவு பட்ட இன்பம்; நித்தியம் நைமித்திகம் காமியம் முதலிய விரதங்களால் உடன்பட்டுப் பயிறல் ஒழியின் அளவுபட்ட துன்பம் என்றும் கூறுக.
|