பக்கம் எண் :

340இலக்கணக் கொத்து 

நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் பொருந்திநிற்கும், செய்யா என்னும் வாய்பாடு (67) உண்டு என்னும் வாய்பாடு (85) முதலியனவும் அது. அவை வினையியலுள் காட்டினாம். இவை போல்வன எல்லாம் ஒரு பொருட்கு ஒரு வாய்பாடு வந்தன.

ஒரு பொருட்கு ஒரு வாய்பாடு தாமே விளங்கலின் கொண்டிலம் என்க. 42

சொற்பொருள் உரைக்க ஏதுக்கள்

129பொருள்அதி காரம் முன்னம் உத்தி
வெளிப்படை குறிப்பே மெய்பாடு அன்மொழி
ஒட்டுஆகு பெயரே உவமை இறைச்சி
உபசாரம் ஆசை உள்மயக்கு ஆதி
ஏதுவாக இயம்புவர் சொற்பொருள்.
 

இப்பதினைந்தும் காரணமாக இடன் அறிந்து சொற்குப் பொருள் உரைப்பர் என்றவாறு.

‘ஆதி’ என்றதனால் ஞாபகம், உடம்பொடு புணர்த்தல், இலேசு, குறை, வேண்டா கூறல், சொல்லாற்றல், பொருள் ஆற்றல், தாற்பரியம், செய்யுள் விகாரம், இருவகை வழக்கு, திசை வழக்கு, மரூஉமொழி, பொது, சிறப்பு, தன்மதம், பிறர்மதம், வினை, சார்பு, இனம், இடம்-இவ்விருபத்தொன்றும் ஒழிந்தனவும் காரணமாகக்கொண்டுபொருள் உரைப்பர் என்க. பெரும்பான்மை வருவனவற்றை எடுத்தோதிச் சிறுபான்மை வருவனவற்றை ‘ஆதி’ என்பதனால் தழுவினம் என்க.

பொருள் காரணமாகச் சொற்பொருள் உணர்த்தலாவது முன்பே தனக்கு வேண்டிய பொருளைக் கருதி கொண்டு பின்பு அப்பொருளுக்கு ஏற்க சொற்பிரித்துச் சந்தி கூட்டுதல்,

‘தவரடி புனைந்த தலைமையோன்                        -சி. பொ. பாயிரம். 11

இத்தொடருக்கு தவருடைய அடியைப் புனைந்த அன்பிற் பெரியோன் என்ற தவத்தோராலே தன்னுடைய அடியைப் புனையப்பட்ட அரிவிற்பெரியோன் என்றும் கூறுக.