பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 40,42339

அவற்றை -அவ் + வற்று + ஐ என்பது, அவை + வற்று + ஐ என்பது அவற்றை என முடியும்.

நிறு, கூ ஏ என்பன ஒருபொருள்; சொல், விள் என்பன ஒருபொருள்.]

ஓசை நான்கு

127எடுத்தல் படுத்தல் இரண்டே ஓசை;
நலிதல் விலங்கொடு நான்குஎன் பார்சிலர்;
மூன்றுஎனத் துணிந்தே மொழிகுவர் பலரே.

என்பது வெளி.

[வி-ரை: ஐ-விலங்கல் ஒலி உடையது. பிரயோகவிவேக நூலார் எடுத்தல் படுத்தல் நலிதல் என்ற மூன்றனையே கொண்டார். ‘‘நலிதலை ஈறும் ஈற்றயலுமாக உடைய செய்யுளுறுப்பைச் சுரிதகம் என்பர். உருவகம் தீவகம் என்பது போலச் சுவரிதகம் என்பது சுரிதகம் என நின்றது. தமிழ் நூலுரைகாரர் சுரிந்து இறுதலின் சுரிதகம் என்பது அறியாமை’’. பி.வி. 40 உரை.] 41

ஒரு சாரார் கூற்று

128ஒருபொருட் கேபல வாய்பாடு வருதலும்,
பலபொருட் கேஒரு வாய்பாடு வருதலும்,
உளஎனமொழிப உணர்ந்திசி னோரே.

எ-டு:

செய்து செய்பு செய்யா, செய்யூ;

ஆநின்று, கின்று, கிறு

-இவை போல்வன எல்லாம் ஒரு பொருட்கே பல வாய்பாடு வந்தன.

செய்யும் என்பது இருதிணைக்கும், ஆண்பாற்கும், பெண்பாற்கும், ஒருமைக்கும், பன்மைக்கும், முற்றிற்கும், எச்சத்திற்கும்,