பக்கம் எண் :

80இலக்கணக் கொத்து 

‘வினைமுற்றே வினையெச்சம் ஆகலும்’                                -ந. 351

என்றார். இம்மறவி உரையாசிரியர் போதகாசிரியரோடு மூவர்க்கும் பொது. இம்முறை இப்பதினொன்றும் என்க.

[வி-ரை: அன்றி என்ற வினையெச்சம் வினைமுற்றாய்த் திரியும் என உயரீற்றுப் புணரியலில் நன்னூலார் குறிப்பிட்டதனால் வினையெச்சம் வினைமுற்றாய்த் திரிதல் வேண்டும் என்பதும் வினைமுற்று வினையெச்சமாய்த் திரிதல் ஏற்றதன்று என்பதும் போதரவும், பின் வினையியலுள் வினைமுற்றே வினையெச்சமாகத் திரியும் என்று அவர் குறிப்பிட்ட செய்தி, இடையில் ஏற்பட்ட தமோகுணத்தான், கூறவேண்டிய முறையை மறந்து கூறியதாகும் என்பது இவ்வாசிரியர் கருத்து.

வினைமுற்றே வினையெச்சமாய்த் திரியும் என்பது சேனாவரையர் முதலாயினார் கருத்து. வினையெச்சமே வினை முற்றாய்த்திரியும் என்பது நச்சினார்க்கினியர் முதலாயினார் கருத்து. யாதேனும் ஒரே கருத்தை இறுதிவரை தழுவாது முதலில் ஒன்று கூறிப் பின்னர்ப் பிறிதொன்றினைக் கூறியது முறை மறந்து கூறியதாம். நூலாசிரியரிடம் காணப்படும் இக்குறை உரையாசிரியர், போதகாசிரியர் என்பாரிடமும் காணப்படும் என்பது. பாடைமாறுபாடு முதல் முறைமறந்து அறைதல் ஈறாகக் கூறப்பட்ட இப்பதினொன்றும் மொழி இலக்கணத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்குக் காரணங்களாம்.]

12இம்முறை எல்லாம் எவர்பகுத்து அறியினும்
அவத்தை வசத்தால் அலைகுவர் திடனே

நனவின் அறிந்ததைக் கனவின் மயங்கியும், கனவின் அறிந்ததை நனவின் மயங்கியும் நனவினுள்ளும் பிரேரகத்தின் அறிந்ததைச் சாக்கிரத்துள் மயங்கியும், சாக்கிரத்தின் அறிந்ததைப் பிரேரகத்தின் மயங்கியும், பிரேரகத்தினுள்ளும் தனக்கு உரிய யாதானும்ஒரு மணிப்பொற்பணியையாதானுமொரு காரணத்தால் பிறன் ஒருவன் கையில் கொடுத்துப் போக்கி, சிலபொழுது இடையிட்டு அவன் கொண்டுவந்துதர வாங்கிப்பார்த்து, அதுவோ வேறொன்றோ என்னும் ஐயம் தீர்ந்து, சிலர்க்கு அறிவித்துச் சேமத்தின் கண்ணே வைத்து, சிலபொழுது இடையிட்டு அவனைக் கண்டு ‘அப்பணி தருவாயாக’ எனப் பகைக்கொண்டு, சிலபொழுது