| பாயிரவியல் - நூற்பா எண். 6 | 81 |
இடையிட்டு அப்பணியைக் கண்டு, தெளிந்து பகைதீர்ந்தான். இவை போல்வன அவத்தை வசத்தாலலைதல். இவையும் மூவாசிரியருக்கும் பொது. [வி-ரை: பாடைமாறுபாடு முதல் முறைமறந்து அறைதல் ஈறாகிய பதினொன்றனையும் நன்கு பகுத்து அறியினும், உயிர்நிலை உபாதியாகிய சாக்கிரம்-சொப்பனம்-சுழுத்தி முதலியவற்றால் மனத்திட்பம் அழிபுபெறுதலுக்கு உலகியல் செய்தியை எடுத்துக் காட்டாகத் தந்துள்ளார். சாக்கிரம்-கவனிப்பு, விழிப்பு; பிரேரகம்-காரியப்படுதல்.] 13 | அதிமதி நுட்பமோடு அதிகலை கற்பினும் விதியது வசத்தால் விதிவிலக்கு அயர்ப்பாம் |
அதிமதி - அளவிறந்த புத்தி; அதிகலை - மேம்பாட்டினை உடையநூல். விதி - ஊழ். விதி, விலக்கு - வழுவில்லது, வழுவுடையது. அயர்த்தல் - விதியை விலக்கு என்றும், விலக்கை விதி என்றும் கூறுதல். இக்கருத்து. ‘நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்’ - குறள் 373 ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ - குறள் 423 ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு’ - குறள் 396 இவை முதலாயினவற்றுள் காண்க இவையும் மூவாசிரியருக்கும் பொது. [வி-ரை: அளவிறந்த இயற்கையறிவோடு மேம்பட்ட நூல்களைக் கற்றாலும் போகூழ் வயத்தால் விதியை விலக்கு என்றும், விலக்கை விதியென்றும் மயங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றைக் கற்றானாயினும்,
|