பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 14145

பதத்தானும் அடுகின்றான் என்னும் கிரியா பதத்தானம் கருத்தா என்று அறியப்படுதலானும், தான் தெரியாக் கருத்தாவாயிற்று. ‘வறியோர் சுற்றம் உவப்பர்’ என்பதும் அது.-வீரசோழியம். 41 உரை.

‘ஒத்தகிழவனும் கிழத்தியும் காண்ப’ கிழவனைக் கிழத்தி காண்பாள்; கிழத்தியைக் கிழவன் காண்பான் எனக் கிழவன் கிழத்தி என்ற இரு சொற்களும் ஒருகால் வினைமுதலாயும் ஒருகால் செயப்படுபொருளாயும் நிற்றல் தடுமாற்றம் எனப்பட்டது.

கொல்லாமை, கோறல், தெளிவு, ஐயுறவு என்ற தொழிற் பெயர்கள் எழுவாயாயினமை காண்க. இவையெல்லாம் பிரயோகவிவேகத்திலும் விளக்கப்பட்டுள்ளன.

கருவிகருத்தா, இடக்கருத்தா, கொள்வோன் கருத்தா - என்பன இலக்கண ஆசிரியர் பலருக்கும் உடன்பாடல்ல. இதுபற்றிப் பிரயோகவிவேகம் 11ஆம் காரிகை உரையில்,

‘‘இனி, எழுத்தாணி எனவும்,

‘கண்ணவனை யல்லது காணாச் செவியவன(து)
எண்ணருஞ்சீ ரல்ல(து) இசைகேளா - அண்ணல்
கழலடி யல்லது கைதொழா அஃதால்
அழலங்கைக் கொண்டான்மாட் டன்பு.’

‘கோளில் பொறியில் குணமிலலே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.’                                            - கு. 9

எனக் கருவிகருத்தாவாகியும்,

‘இரப்பவர் என்பெறினும் கொள்வர்’                             - தனிப் பாடல்.

எனச் சம்பிரதானம் கருத்தாவாகியும்,

‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல’                                 - கு. 151

‘அறம்நோக்கி ஆற்றுங்கொல் வையம்’                               - கு. 189

‘வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்’                                          - கு. 239