பக்கம் எண் :

170இலக்கணக் கொத்து 

[வி-ரை: ஓர் உருபிற்கு ஒரே பொருளே உரிமையான பொருளெனினும், நாளடைவில் அது வேறு பொருளையும் கொடுத்தல் மொழிவளர்ச்சியால் ஏற்பட்ட பெருக்கமாம் என்பது.]

எழுவாய் பிறிதுபொருளும் தருதல்

52வினைமுதல் அன்றியும் விளம்பும் எழுவாய்.

எ-டு:

மாடம் செய்யப்பட்டது - (இது தெரிநிலைச் செயப்படு பொருள்.) 40

செயப்படுபொருள் பிறிது பொருள்தருதல்

53செயப்படு பொருளைத் தெளித்தலும் அன்றி
வேறு பொருளையும் விளக்கும் ஐயே.

எ-டு:

வீட்டை விரும்பினான்.

[வி-ரை: செயப்படுபொருளாவது வினைமுதல் தொழிற் பயன் உறுவதாம். வினைமுதல் சாத்தன்; அவன் தொழில் விரும்புதல்; அதன் பயனை உறுதல் வீடு. வீடாவது நல்வினை தீவினையாகிய தொழில்களிலிருந்து விடுதலை பெறுதலாம். வீடு செயலற்றநிலை; புடைபெயர்ச்சி ஆகிய தொழிலையும் நீக்குதலே வீடாதலின் வீட்டை விரும்பினான் என்ற தொடரில் ஐ உருபு செயப்படுபொருளைச்சுட்டாது, செயலற்ற ஒன்றைச் சுட்டுவது காண்க.] 41

மூன்றாம் உருபு பிறபொருளும் தருதல்

54கருவி கருத்தா உடன்நிகழ்வு அன்றியும்
மூன்றாம் உருபுகள் தோன்றும் பலவினும்.

எ-டு:

மலையொடு பொருத மால்யானை - வினையின்மை; (பொருதல் யானைக்கு அல்லது மலைக்கு இன்மையின்.)