பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 42, 43169

தொடியொடு தொல்கவின் வாடினதோள் (கு. 1235) - வேறு வினை; (தொடிக்குத் தோள்போல வாடுதல்தொழில் இன்றி நெகிழ்தல் தொழிலே உண்மையின்).

‘பாலொடு தேன்கலந் தற்றே’ (கு. 1121) - மயக்கம்; (இரண்டும் ஒன்றோடொன்று பின் பிரித்தல் இயலாதவாறு கலத்தலின்.)

மதியொடு ஒக்கும் முகம் - ஒப்பு;

விலங்கொடு மக்கள் அனையர் (கு. 410) - ஒப்பு அல்ஒப்பு; (ஒப்புமை கூறத்தகாத விலங்கையும்மக்களையும் ஒப்பிட்டமையின்.)

‘எழுத்தொடு புணர்ந்த சொல் ஆ கும்மே’ (தொ.சொ.401) - ஒற்றுமை; (சொல் எனத் தனித்த ஒன்று இன்றி எழுத்தொடு கூடிய சொல் அமைதலின்.)

[வி-ரை: இச்செய்திகள் பிரயோகவிவேகத்து 16ஆம் காரிகை உரையிலும் உள.] 42

நான்காம் உருபு பிறபொருளும் தருதல்

55கொள்வோனை விட்டும் கு-பல பொருளாம்.

எ-டு:

சோற்றிற்கு அரிசி - ஆதி காரணகாரியம்;

கூழிற்குக் குற்றேவல் - நிமித்த காரணகாரியம்;

பூவிற்குப் போனான் - பொருட்பெயரின் பின் வினையெச்சப் பொருட்டாயிற்று. பூ வாங்குதற்கு என்பது பொருள்.)

உணற்கு வந்தான் - தொழிற்பெயரின் பின் வினையெச்சப் பொருட்டாயிற்று.

பிணிக்கு மருந்து - பொருட்பெயரின் பின் பெயரெச்சப் பொருட்டு.

உணற்குக் கருவி - தொழிற்பெயரின் பின் பெயரெச்சப் பொருட்டு