| ஒழிபியல் - நூற்பா எண். 31, | 305 |
4 | ஒவ்வொரு வேற்றுமை வெவ்வேறு ஆகியும்
|
[வி-ரை: ஒவ்வொரு வேற்றுமை வெவ்வேறாகியும் இயலுவதாவது, முதற்சொல் ஏற்கும் வேற்றுமை உருபு வேறுபடுவது போல முடிக்கும் சொல்லும் வேறாக அமையவும், அவ்வுருபும்முடிக்குஞ்சொல்லும் ஆகியவற்றின் பொருளை உள்ளடக்கி, அம்முதற்சொல்லோடு விகுதியொன்று சேர்ந்து பகுபதமாகி அத்தொடர்ப் பொருளைக் குறிப்பதாம். கணக்கான் முயன்று உண்பவன் - கணக்கன், ஆரூர்க்கு இறைவன் - ஆரூரன், சிவனது சமயம் - சைவம், தம்முடைய உறவினன் - தமன் உருபு வேறுபடுந்தோறும் முடிக்குஞ் சொல்லும் வேறாதல் காண்க.] குழையினை அணிந்தவன் - குழையன், தமிழைச் சொல்லுவான் - தமிழன், பொன்னை உடையான் - பொன்னன். மருந்தினைக் கூட்டுவான் - மருத்துவன், கூத்தினைப் பயின்றவன் - கூத்தன், மூன்று என்னும் எண்ணைப் பெற்றவர் - மூவர் எனவும், தொல்காப்பியனால் செய்யப்பட்ட நூல் - தொல்காப்பியம், (அகத்தியம், அவிநயம் முதலானதும் அது) கணக்கான் முயன்று உண்பவன் - கணக்கன். ஆற்றலால் வென்றவன் - ஆற்றலான், மானத்தால் கெட்டவன் - மானி’ காமத்தால் மயங்கினவன் - காமி, பிணியான் வருந்துகின்றன்வன் - பிணியன், எனவும், |