ஆரூர்க்கு இறைவன் - ஆரூரன், சிவனுக்கு அடியவன் - சைவன், பகவற்குப் பாடியாடினான் - பாகவதன், அரசற்கு மகள் - அரசி, எனவும், வடக்கின்நின்றும் வந்தவன் - வடமன், வாணிகத்தின் ஆயினான் - வாணிகன் எனவும், சிவனது சமயம் - சைவம். கோட்டது நுனி - கோட்டது, எழுத்தினது இலக்கணம் - எழுத்தது, சூத்திரத்தினது பொருள் - சூத்திரத்தது, குழலினது ஓசை - குழலது, [தமன், தமள், தமர், நமன், நமள், நமர், நுமன், நுமள், நுமர், எமன், எமள், எமர் என்ற பன்னிரு கிளைப்பெயரும் அது] எனவும், மதுரைக்கண் இருந்தவன் - மதுரையான், விசாகநாளில் பிறந்தவன் - விசாகன், அரச குலத்தில் பிறந்தவன் - அரசன், அம்பலத்தில் ஆடினவன் - அம்பலவன், எனவும், வேற்றுமைப் பொருள்களை ஏற்று நின்று வெவ்வேறாயின. 5 | இதனை உடையது இதுஎன நின்றும் |
6 | இதனது உடைமை இதுஎன நின்றும் |
இதனை உடையது இது, இதனது உடைமை இது - இவ் விரண்டனையும் திணைபால் இடங்கள்தோறும் ஒட்டி, இவற்றிற்கு உதாரணம் முன்னும் பின்னும் காட்டியவற்றுள் காண்க. |