| ஒழிபியல் - நூற்பா எண். 31 | 305 |
[வி-ரை: குழையது உடைய குழையது. சாத்தனது உடைமை சாத்தனது. - பிறவும் அன்ன.] 7 | இடப்பொருள் உணர்த்தும் வினா-சுட்டு எண்-பெற இடைச்சொல் லாகவே எழுந்து நின்றும்
|
யாண்டு, யாங்கு, எங்கு, எங்கண், எவண், யாவண், எங்ஙனம், யாங்ஙனம் எனவும், ஆன, ஈன, அங்கு, இங்கு, உங்கு, ஆங்கு, ஈங்கு, ஊங்கு, அவண், இவண், உவண், அம்பர், இம்பர், உம்பர், அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எனவும், ஒருவயின், இருவயின் மூவயின், எண்வயின் எனவும் இடப்பொருள் உணர்த்தும் வினா - சுட்டு எண் பெற இடைச் சொல்லாகவே எழுந்து நின்றன. [வி - ரை: இவை பிரயோக விவேக 33-ஆம் காரிகை உரையில் விளக்கப்பட்டுள்ளன. ஒருவயின், இருவயின், பலவயின் - இவை எண்ணொடு நின்ற ஏழாம் வேற்றுமை. இடப்பொருள் உணர்த்தும் இடைச்சொல் என்னும் அவ்வியயதத்திதன். அவ்வயின் இவ்வயின் உவ்வயின் எவ்வயின், அங்கண் இங்கண். அவ்வாய் ஆயிடை - ‘இவை சுட்டு முதல்வயினும்’ (தொ. எ. 334) என்னும் சூத்திரத்துக் காட்டிய ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணர்த்தும் அவ்வியயதத்திதன். நன்னூல் அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் எனக் காட்டியனவும் அன்ன. பி. வி. 33 உரை] 8 | தன்மை மாத்திரம் தானாய் நின்றும் |
வெண்மை வெளுப்பு வெள்ளை, கருமை, கறுப்பு, ஆண்மை, பெண்மை, கோன்மை, ஆடுதல் ஆடல் ஆட்டம் - எனத் தன்மை மாத்திரம் தானாய் நின்றன. |