பக்கம் எண் :

308இலக்கணக் கொத்து 

[வி-ரை: ‘‘ஆண்மை, பெண்மை, தாளாண்மை, குடிமை, செங்கோன்மை, வள்ளன்மை, காதன்மை, இவறன்மை, ஒருமை, இருமை, எழுமை, பகைமை, கேண்மை, புகழ்மை, சமழ்மை இவை எல்லாம் ஆண் பெண் முதலிய நாமத்தின்கண் வந்த பாவ தத்திதனாம்’’ - பி. வி. 34.]

9பெயர்ச்சொல் முதலா நான்கினும் பிறந்தும்

குழையன், உண்டான், மற்றது மற்றையான். குழவி மழவன் மகவு - எனப் பெயர்ச்சொல் முதலா நான்கினும் பிறந்தன.

[வி-ரை: குழை பெயர்; உண் - வினை; மற்று, மற்றை - இடை; குழவி, மழ, மகவு - உரி.]

10பெயர்தான் அறுவகை யாகப் பிரிந்தும்

பெயர் அறுவகையாகப் பிரிதல் (பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில்) நன்னூலார் விரித்தனர்; அதனால் விரித்திலம் என்க.

[வி-ரை: பொன்னன், மதுரையான், ஆதிரையான், கண்ணன், நல்லன், தச்சன் முதலாக முறையே காண்க.]

11பகுபதம் ஆயினும் பலகுணப் படலால்
பகாப்பதம் என்னப் பெயர்படல் இயலும்

படலால் பெற்று என்க. ஐந்து பெயர் பெற்றது பலர் நூல்களானும் காண்க. பகுபதம் என்னும் பெயர் கூடில் ஆறென்றே கொள்க.

[வி-ரை: ‘த ந நு எ என்னும் அவை முதலாகிய, கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா’ (தொ. சொ. 410 சே.) என்னும் நூற்பாவில் கூறப்பட்ட தமன், தமள், தமர், தமது தம்மவை, நமன் ... ....நம்மவை, நுமன்... ...நும்மவை, எமன் .. ... எம்மவை - என்பன. இவை தனக்குச் சொந்தமானவன், தமக்குச் சொந்தக்காரன் என்றார்போல இருவகைக்கும் பொது ஆதலின்