| ஒழிபியல் - நூற்பா எண். 34-39 | 329 |
என்பனவற்றை, இலையிரட்டையும் பூவிரட்டையும் போல் வந்தன ‘இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்து இசையா’ (தொ. சொ. 48) என்னும் சூத்திரவிதி பெற்றன என்பர். இவற்றை வடநூலார் ‘தேதீவ்யமானம்’ என உதாரணம் காட்டி, யங் லுக்கு என்பர். புநப்புந, ரக்ஷாக்ஷ, சிவசிவ, ராமராம, திநேதிநே என வடமொழிக் கண்ணும் மக்கள் இரட்டை போல வரும்’’ - பி. வி. 39 உரை.] 34 அடுக்கு அல்லாதன 121 | அடுக்குஅல் லவையும் அடுக்குஅவை போல்வரும் அவ்வடுக்கு அணியினுள் அளவிலை என்ப.
|
எ-டு: ‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின்’ - கு. 296 ‘இறந்தார் இறந்தார் அனையர்' - கு. 310 எனவரும். [வி-ரை: இதனைச் சொல்பின்வருநிலையணியுள் காணலாம்.] 35 மூவகைத் துணிவு 122 | பொருளைப் பொருளெனல், பொருள்அல் லதனையே பொருளெனல், இதுபொருள் அன்றுஎன்று அறிந்தும் இதுவே பொருள்எனல் எனமூன்று துணிவே.
|
எ-டு: நிலம் நீர் நெருப்பு முதலிய பொருள்களை அது அதுவாகவே துணிதல் பொருளைப் பொருளெனத் துணிதலாம். பித்தளையைப் பொன் என்றும், பழுதையைப் பாம்பு என்றும், சிப்பியை வெள்ளி என்றும், குற்றியை மகன் என்றும் துணிதல் பொருள் அல்லதனைப் பொருள் என்று துணிதலாம். |