பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 7101

‘இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்று
சிறப்புடை மரபின் அம்முக் காலமும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மூ விடத்தான் வினையினும் குறிப்பினும்
மெய்ம்மை யானும் ஈரிரண் டாகும்’                              தொ. சொ. 427

என்று ஓதியது அநுவாதம் ஆயிற்று என்பர் நச்சினார்க்கினியர்.]

8தமிழ்விதிக்கு அகப்படாச் சிலவிதி சாற்றினன்
அவைவட மொழிவிதி என்றே அறிக

மொழிபெயர்த்தற்கு வாராத சிலவற்றை அம்மொழியாகவே அறைந்தனன் என்பது தோன்ற ‘அகப்படா வடமொழி’ என்றாம். அவை சைவன், சைவம், பார்வதி, கார்த்திகேயன், காங்கேயன் முதலியன என்க.

[வி-ரை: சைவன் முதலிய சொற்கள் தமிழ்விதியை ஒட்டிமையாது வடமொழிவிதியை ஒட்டி அமைந்த தத்திதாந்தச் சொற்களாம். முதல்சொல் தன்னைச்சேர்ந்த மற்ற சொற்கள் எல்லாம் நீங்கத் தான் அவற்றின் பொருளைக்கொண்டு சிறிது திரிந்து நிற்பது தத்திதாந்தச் சொல்லாம்.

சிவனை வழிபடுபவன் - சைவன்
சிவனோடு தொடர்புடைய சமயம் - சைவம்
பர்வத மன்னன் புதல்வி - பார்வதி
கிருத்திகை மீன்களின் மகன் - கார்த்திகேயன்
கங்கையின் மகன் - காங்கேயன்

போல்வன. இத் தத்திதம் பற்றிய செய்திகள் பலவற்றையும் பிரயோகவிவேக தத்தித படலத்தால் அறிக.]

9வேற்றுமை வினைஒழிபு எனமூன்று ஆக்கி
அவற்றினுள் சொல்லினுள் சிலவிதி அடக்கி
ஏனைநால் விதியும் இயம்பிலன் என்க

அறநூல் முதலிய நான்கற்கும் கருவி எழுத்து முதல் ஐந்தே. அவற்றுள்ளும் ஏனை நான்கற்கும் கருவி சொல்லே. அச் சொல்லிற்குக் கருவி அதுவே. ஆகையால் எல்லாவற்றினும்